உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / ரூ.13 லட்சம் வரி பாக்கி என கூறி வங்கி கணக்கு முடக்கம்

ரூ.13 லட்சம் வரி பாக்கி என கூறி வங்கி கணக்கு முடக்கம்

திருப்பத்துார்: திருப்பத்துார் மாவட்டம், திருமாஞ்சோலை புதுமனையை சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி கவிதா, 40, ஆம்பூர் தனியார் நிறுவனத்தில், 7,000 ரூபாய் மாத சம்பள பணியாளர். இவர், நேற்று மகளிர் உரிமை தொகை பெற, வாணியம்பாடி சி.எம்., சாலையிலுள்ள ஸ்டேட் பாங்க் சென்றார்.அங்கு வங்கி மேலாளர், 'நீங்கள் அரசுக்கு, 13.22 லட்சம் ரூபாய் வரி பாக்கி வைத்துள்ளீர்கள். எனவே, உங்கள் வங்கி கணக்கை முடக்கி வைக்க கோவை, போத்தனுார் வணிக வரித்துறை அலுவலகத்தில் இருந்து கடிதம் வந்துள்ளது' எனக்கூறி, அக்கடிதத்தை கவிதாவிடம் காண்பித்தார்.அதிர்ச்சியடைந்த அவர், 'என் பெயர் மற்றும் ஆதார் எண், பான் கார்டு எண், வங்கி கணக்கு எண் ஆகியவற்றை முறைகேடாக பயன்படுத்தி, வணிகம் செய்து, வரி பாக்கி வைத்து, அரசையும், என்னையும் ஏமாற்றியவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கோரி, திருப்பத்துார் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை