உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் /  பஸ் சக்கரத்தில் சிக்கி குழந்தை பரிதாப சாவு

 பஸ் சக்கரத்தில் சிக்கி குழந்தை பரிதாப சாவு

திருப்பத்துார்: திருப்பத்துார் அருகே, பள்ளி பஸ்சின் சக்கரத்தில் சிக்கி, ஒன்றரை வயது குழந்தை இறந்தது. திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி, கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் வேலு, 45; கூலி தொழிலாளி. இவரது மனைவி திலகவதி, 40. இவர்களுக்கு இரு மகள்கள் உள்ள நிலையில், ஒன்றரை வயதில் துர்சாந்த் என்ற ஆண் குழந்தை இருந்தது. இரு மகள்களும் சத்திரத்தில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கின்றனர். மாணவியரை ஏற்றி செல்வதற்காக, வீட்டின் அருகே நேற்று காலை, 8:00 மணிக்கு, பஸ் வந்தது. திலகவதி, துர்சாந்த்துடன், இரு மகள்களையும் பஸ்சில் ஏற்ற சென்றார். திடீரென குழந்தை துர்சாந்த் பஸ்சின் முன்பக்கமாக ஓடியது. இதை கவனிக்காத டிரைவர் பஸ்சை இயக்கியதில், அதன் சக்கரத்தில் சிக்கி குழந்தை உயிரிழந்தது. காவலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்