கலர் கலராக கள்ளச்சாராயம்; வாணியம்பாடியில் டோர் டெலிவரி
திருப்பத்துார்; திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தமிழக - ஆந்திர எல்லையை ஒட்டிய மலை பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது.அது, கருப்பு, ஆரஞ்சு, வெள்ளை நிறத்தில் குளிர்பானங்களை போல, வாணியம்பாடி சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளான, வாணியம்பாடி டவுன், வாரச்சந்தை, கச்சேரி சாலை, ஆற்றுமேடு மற்றும் கிராம பகுதிகளில் சாராய வியாபாரிகள் நுாதனமாக வீடுகளுக்கே சென்று, 'டோர் டெலிவரி' செய்து விற்கின்றனர்.சில நேரங்களில் சாலையோரங்களில், 'போனா வந்தா கிடைக்காது; பொழுது போனா சிக்காது' என கூவிக்கூவி விற்கின்றனர். இதை மாவட்ட போலீசார் தடுத்து நிறுத்த, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.