உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / மது குடித்ததை தட்டிக்கேட்ட தந்தை, மகன் மீது தாக்குதல்

மது குடித்ததை தட்டிக்கேட்ட தந்தை, மகன் மீது தாக்குதல்

திருப்பத்துார்:திருப்பத்துார் மாவட்டம், கந்திலியை சேர்ந்தவர் சுரேஷ், 56. இவரது மகன் ஹரிகரன், 35. இவர், வெலக்கல்நலத்தத்தில், ஆங்கில மருந்துக்கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு, சுரேஷின் நிலத்தில், கந்திலி அடுத்த கோட்டூரை சேர்ந்த பழனி, தன் நண்பர், 10க்கும் மேற்பட்டோருடன் சேர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார். அங்கு சென்ற சுரேஷ், தன் நிலத்தில் மது அருந்த எதிர்ப்பு தெரிவித்தார். இதை மொபைல்போனில், மகன் ஹரிகரனுக்கு தெரிவித்தார். ஹரிகரனும் போன் மூலம் பழனியிடம், விவசாய நிலத்தில் மது அருந்தக்கூடாது என எச்சரித்தார். ஆத்திரமடைந்த பழனி, தன் நண்பர்கள், 10 பேருடன் சென்று, ஹரிகரனை சரமாரியாக தாக்கினர். மகன் நீண்ட நேரமாக வீட்டுக்கு வராததை அறிந்த சுரேஷ், மகனை தேடி சென்றபோது, அவரையும், பழனி மற்றும் அவரது நண்பர்கள் சரமாரியாக தாக்கினர்.இருவரும் மயக்கமடைந்ததால் அவர்களை சாலையோரம் வீசி விட்டு பழனி மற்றும் அவரது நண்பர்கள் தப்பினர். அவ்வழியாக சென்ற மக்கள், 108 அவசர கால ஆம்புலன்ஸ் மூலம் சுரேஷ் மற்றும் ஹரிகரனை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.கந்திலி போலீசார் தலைமறைவான பழனி மற்றும் அவரது நண்பர்கள், 10 பேரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை