உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / மாமனார், மாமியாரை கொல்ல முயன்ற மருமகனுக்கு கம்பி

மாமனார், மாமியாரை கொல்ல முயன்ற மருமகனுக்கு கம்பி

ஜோலார்பேட்டை; மாமனார், மாமியாரை கொல்ல முயன்ற மருமகனை, ஜோலார்பேட்டை போலீசார் கைது செய்தனர். திருப்பத்துார் மாவட்டம், பக்கிரிதக்காவை சேர்ந்தவர் ராஜா, 55. இவரது மனைவி காளியம்மாள், 51. இவர்களது மகள் நந்தினி, 30, மருமகன் அரவிந்த், 35. இவர்கள் அனைவரும், உறவினரின், 8 வயது மகளை அழைத்துக்கொண்டு நேற்று முன்தினம், காரில், ஏலகிரி சென்றனர். காரை அரவிந்த் ஓட்டினார். அங்குள்ள ஏரிக்கரை வழியாக சென்றபோது, கார் ஏரிக்குள் பாய்ந்தது. கார் கதவை திறந்து வந்த அரவிந்த், மனைவி, சிறுமியை காப்பாற்றினார். பின், மாமனார், மாமியாரையும் காப்பாற்றியதில், ராஜா காயமடைந்தார். ஜோலார்பேட்டை போலீசார், அரவிந்திடம் நடத்திய விசாரணையில், தம்பதிக்குள் ஏற்பட்ட குடும்ப பிரச்னைக்கு, நந்தினியின் பெற்றோர் துாண்டுதல் காரணம் என நினைத்து, அவர்களை கொல்லும் ‍நோக்கில், ஏரிக்குள் காரை செலுத்தியது தெரிந்தது. ராஜா புகாரில், அரவிந்தை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !