உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / கருக்கலைப்புக்கு ஏற்பாடு பெண் புரோக்கர் சிக்கினார்

கருக்கலைப்புக்கு ஏற்பாடு பெண் புரோக்கர் சிக்கினார்

ஆலங்காயம்:கருக்கலைப்பு செய்ய புரோக்கராக செயல்பட்டவரை கைது செய்த போலீசார், மூன்று கர்ப்பிணியரிடம் விசாரிக்கின்றனர். திருப்பத்துார் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த பூங்குளம் கிராமத்தைச் சேர்ந்த கவிதா, இளவரசி ஆகியோர் கருக்கலைப்பு புரோக்கர்களாக செயல்பட்டு வந்தனர். இவர்கள் கர்ப்பிணியருக்கு கள்ளக்குறிச்சி பகுதியில் ஸ்கேன் செய்து, திருப்பத்துார் பகுதியில் கருக்கலைப்பில் ஈடுபட்டு வருவதாக, கள்ளக்குறிச்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அவர்களை கண்காணித்தனர். நேற்று முன்தினம் இரவு திருப்பத்துார் அடுத்த அரித்தான் வட்டத்தைச் சேர்ந்த, நான்கு மாத கர்ப்பிணியான தேவி, ஜோலார்பேட்டையைச் சேர்ந்த கர்ப்பிணி விஜி மற்றும் ஒரு முஸ்லிம் மதத்தை சேர்ந்த கர்ப்பிணி ஆகிய மூவருக்கும் கருக்கலைப்பு செய்ய, அரித்தான் வட்டத்தில் உள்ள தேவி வீட்டில் ஒன்றாக கூடி இருந்தனர். கள்ளக்குறிச்சி போலீசார் புரோக்கர் கவிதாவை கைது செய்து, கர்ப்பிணியர் மூவரிடமும் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை