உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / இண்டியா கூட்டணியை உருவாக்கிய நிதீஷ்குமாரே பா.ஜ., பக்கம் வந்துள்ளார்

இண்டியா கூட்டணியை உருவாக்கிய நிதீஷ்குமாரே பா.ஜ., பக்கம் வந்துள்ளார்

திருப்பத்துார்: ''இண்டியா' கூட்டணியை உருவாக்கிய நிதீஷ்குமாரே, அந்த கூட்டணி வேண்டாம் என, பா.ஜ.,வின் பக்கம் வந்துள்ளார்,'' என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.திருப்பத்துாரில், 'என் மண், என் மக்கள்' பாத யாத்திரை நிகழ்ச்சி நடந்தது. இதில், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது: ஜார்கண்ட், சட்டீஸ்கர், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற எல்லா மாநிலங்களும், மோடியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. காங்., ஆட்சியின், 2004 முதல், 2014 வரை, 10 ஆண்டு காலத்தில், அலைவரிசை காற்று, நிலக்கரி என எதையும் விட்டு வைக்காமல், 12 லட்சம் கோடி ரூபாய் வரை ஊழல் செய்தார்கள். காரணம், ‍கொள்கை இல்லாத, 10 கட்சிகள் ஒன்றாக இணைந்து ஆட்சிக்கு வந்தார்கள். எம்.பி., எண்ணிக்கை அடிப்படையில் ஒவ்வொரு கட்சியும் மந்திரி இலாக்காவை பிரித்து கொண்டு, ஆட்சி நடத்தினர். மன்மோகன் சிங் ஒரு பொம்மை பிரதமராக மட்டும் இருந்தார். காங்., கட்சிக்கு தனிப்பெரும்பான்மை இல்லை. காங்., இதுபோன்ற கட்சிகளையே நம்பி இருந்தது. எல்லோரும் ஊழல் செய்ய ஆரம்பித்தனர். அடுத்த முறை வருவோமா தெரியாது எனக்கூறி, இருக்கும் வரை மக்கள் பணத்தை சுரண்டி விட்டு செல்வோம் என, இந்தியா வரலாற்றில், இதுவரை பார்க்காத அளவிற்கு ஊழல் செய்து சென்றனர்.நேற்று வரை நிதீஷ்குமார் 'இண்டியா' கூட்டணி தலைவராக இருந்தார். அக் கூட்டணியை துவக்கிய அவர், மோடியை ஆட்சியிலிருந்து அகற்றுவதே இலட்சியம் என, 'இண்டியா' கூட்டணியை உருவாக்கினார். அவரே, அக்கூட்டணி வேண்டாம் என, பா.ஜ.,வின் பக்கம் வந்துள்ளார். தனி மனிதரை எதிர்க்க, எதிரணியில் கொள்கைகளே இல்லாத ஒரு கூட்டம். அவர்களது கொள்கை நாட்டை சுரண்டுவது தான். அடிப்படை கொள்கை இல்லாமல் சேர்ந்த, 'இண்டியா' கூட்டணி சிதறுவதை, நாம் பார்த்து கொண்டிருக்கின்றோம். காங்., 70 ஆண்டுகளாக செய்த பிரச்னைகளை, நாம் சரி செய்து கொண்டிருக்கின்றோம். இந்திய வெளியுறவு கொள்கை முதன்மையாக இருக்கிறது.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை