மேலும் செய்திகள்
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் கைது
04-Oct-2025
நிலத்தகராறில் சித்தப்பாவை வெட்டி கொன்ற மகன் கைது
01-Oct-2025
திருப்பத்துார் : தார்ச்சாலை, 97 லட்சம் ரூபாய் மதிப்பில் போடப்பட்டு, ஒரே நாளில் கந்தலானது. அதன் வீடியோவை பரப்பியதால் ஊராட்சி வார்டு உறுப்பினரை, போலீசார் கைது செய்தனர்.திருப்பத்துார் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரம் - மிட்டாளம் ஊராட்சிகள் இடையே, மேல் கூர்மாபாளையம் அடுத்த ரங்காபுரம் முதல் ராளகொளத்துார் வரை, தார்ச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தில், 2.65 கி.மீ.,க்கு, 97.84 லட்சம் ரூபாய் மதிப்பில், கான்ட்ராக்டர் சக்திகணேஷ் மூலம், கடந்த, 2ல், சாலை போடப்பட்டது. ஆனால் தரமற்ற முறையில் இருந்த சாலை, ஒரே நாளில் குண்டும் குழியுமாக மாறியது. இதுகுறித்து வீடியோ பரவியது.மேலும் புது சாலை தரமற்று இருப்பதாக, அச்சாலையை, 20 மீ.,க்கு, மிட்டாளம் ஊராட்சி வார்டு உறுப்பினர் பிரகாஷ் பெயர்த்தெடுத்து, வீடியோ வெளியிட்டார். இதனால், 2 லட்சம் ரூபாய் இழப்பீடு ஏற்பட்டதாக கூறி, கான்ட்ராக்டர் சக்திகணேஷ், உம்ராபாத் போலீசில் புகார் அளித்தார்.மேலும் சாலை அமைக்க, கமிஷன் கேட்டு மிரட்டி தரமற்ற தார்ச்சாலை எனக்கூறி, அவரே பெயர்த்தெடுத்து, அவதுாறு பரப்பியதாக, மாதனுார் பி.டி.ஓ., ராஜேந்திரனும், பிரகாஷ் மீது புகார் கொடுத்தார். இரு புகார்படி வழக்குப்பதிந்த போலீசார், பிரகாஷை கைது செய்து விசாரிக்கின்றனர்.
04-Oct-2025
01-Oct-2025