உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / ரூ.2,000 கடனை திருப்பி கேட்ட வாலிபர் கத்தியால் குத்தி கொலை

ரூ.2,000 கடனை திருப்பி கேட்ட வாலிபர் கத்தியால் குத்தி கொலை

திருப்பத்துார்:திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பெரியமூக்கனுாரைச் சேர்ந்தவர் கோட்டீஸ்வரன், 27. இவர், சிங்கப்பூரில் பணியாற்றி வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், 30, என்பவருக்கு சில ஆண்டுகளுக்கு முன், 2,000 ரூபாய் கடன் கொடுத்தார். கடந்த வாரம் விடுமுறையில் ஊருக்கு வந்த கோட்டீஸ்வரன், பணத்தை திருப்பி தரும்படி கேட்டபோது மணிகண்டன் மறுத்தார்.கோட்டீஸ்வரன், தன் உறவினர் கிருபாகரனிடம் கூறினார். நேற்று முன்தினம் இரவு, 10:00 மணியளவில் மூக்கனுாரில் கிருபாகரன், மணிகண்டன் இருவரும், ஒன்றாக அமர்ந்து மது அருந்தியபோது, கோட்டீஸ்வனுக்கு தர வேண்டிய, 2,000 ரூபாயை தரும் படி மணிகண்டனிடம், கிருபாகரன் கேட்டார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.தகவலறிந்து அங்கு வந்த கோட்டீஸ்வரனும், மணிகண்டனிடம் தகராறு செய்து பணம் கேட்டார். அப்போது, ஆத்திரமடைந்த கோட்டீஸ்வரன், மணிகண்டனை கத்தியால் குத்த முயன்றார். சுதாரித்த மணிகண்டன், கத்தியை பிடுங்கி, கோட்டீஸ்வரனின் வயிற்றில் சரமாரியாக குத்திக் கொன்று விட்டு தப்பினார். ஜோலார்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை