உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வறட்சியால் கால்நடைகள் பாதிப்பு பசுந்தீவனம், உலர் தீவனம் வழங்க எதிர்பார்ப்பு?

வறட்சியால் கால்நடைகள் பாதிப்பு பசுந்தீவனம், உலர் தீவனம் வழங்க எதிர்பார்ப்பு?

பல்லடம்:வறட்சி காரணமாக கால்நடைகள் பாதிக்கப்படுவதை தடுக்க, பசுந்தீவனம் மற்றும் உலர் தீவனங்கள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.தமிழகத்தில் கடந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு பருவமழை கிடைக்கவில்லை. இதன் காரணமாக, திருப்பூர் மாவட்டத்தில் வறட்சி நிலவி வருகிறது. மாவட்டம் முழுவதும், பல லட்சம் ஏக்கரில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தொழில் பரவலாக நடந்து வருகிறது. தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக பயிர்கள் கருகி வருகின்றன. போதிய உலர் தீவனங்கள் கிடைக்காமல் கால்நடைகளும் பாதிக்கப்பட்டு வருகின்றன.இது குறித்து கால்நடை விவசாயிகள் கூறியதாவது:ஒரு மாட்டுக்கு, வாரம், 100 கிலோ வரை மாட்டு தீவனம் வழங்கப்படுகிறது. 30 ஆயிரம் கிலோ வைக்கோல் தருவிக்கப்படுகிறது. இன்றைய சூழலில், வைக்கோல் கிலோ, 3.50 ரூபாய் வரை ஆகிறது. வசதியுள்ள விவசாயிகள், உலர் தீவனங்களை கூடுதல் விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றனர்.சாதாரண விவசாயிகளுக்கு தீவனத்துக்காக ஏற்படும் செலவு கூடுதல் சுமையை ஏற்படுத்தும். கடந்த, 2017ல் வறட்சி ஏற்பட்டபோது, தமிழக அரசு மூலம், மானிய விலையில் உலர் தீவனங்கள் வழங்கப்பட்டது மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. அதேபோல், தற்போது கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால், பசுந்தீவனம் மற்றும் உலர் தீவனங்களை தமிழக அரசே மானியத்தில் வழங்க வேண்டும்.உலர் தீவனங்களை பொறுத்தவரை, டெல்டா மாவட்டங்களில்தான் அதிகப்படியாக உற்பத்தி ஆகின்றன. விவசாயிகள், தாங்களாகவே தருவித்தால், கூடுதல் செலவு ஏற்படும். அரசே மானிய விலையில் வழங்கினால் எண்ணற்ற விவசாயிகள் பயன்பெறுவார்கள். இதனால், வறட்சியின் பிடியிலிருந்து கால்நடைகளை பாதுகாப்பதுடன், அடிமாடுகளாக கால்நடைகள் விற்பனை செய்யப்படுவதும் தவிர்க்கப்படும்.எனவே, விவசாயம் எதிர்பார்ப்புக்கு இணங்க, பசுந்தீவனம் மற்றும் உலர் தீவனம் வழங்க கால்நடைத்துறை முன்வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை