மேலும் செய்திகள்
பள்ளி வேன்கள் மோதல் 8 மாணவர்கள் காயம்
08-Aug-2024
திருப்பூர்;அறிவியல் இயக்கத்தின் திருப்பூர் வடக்கு பகுதி சார்பில், தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவியருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. அரசு மற்றும் தனியார் பள்ளி குழந்தைகளுக்கு, 'ராக்கெட்' தயாரித்து வானில் ஏவும் தொழில்நுட்பம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.திருப்பூர் மாவட்ட அலுவலகத்தில், எளிய முறையில் ராக்கெட் செயல்முறைகள் விளக்கப்பட்டன. காலை, 10:00 முதல் மாலை, 4:00 மணி வரை, பல்வேறு விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, மாணவ, மாணவியர், தாங்களே ராக்கெட் தயாரித்தனர்.பி.வி.சி., குழாய்கள், தண்ணீர் பாட்டில் போன்றவற்றை பொருத்தி, ராக்கெட் ஏவுவது போன்ற செயல்விளக்க பயிற்சி பெற்றனர். தாங்களே காகித அட்டையில் ராக்கெட் தயாரித்து, தொழில்நுட்ப ரீதியாக வானில் ஏவி பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். ---மாணவ, மாணவியர், ராக்கெட் ஏவுவது குறித்து பயிற்சி பெற்றனர்.
08-Aug-2024