டிராகன் - நீக் படங்களுக்கு இளைஞர்கள் வரவேற்பு
'கோமாளி' படத்தை இயக்கியதன் மூலம், திரைத்துறைக்கு வந்த பிரதீப் ரங்கநாதன்,'லவ் டுடே' படத்தை இயக்கி நடித்தார். அந்த படம் 'பிளாக் பஸ்டர் ஹிட்'. தற்போது அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் இவர் கதாநாயகனாக நடித்துள்ள 'டிராகன்' படம் வெளியாகியுள்ளது. 'காமெடிக்கு காமெடி', 'கருத்துக்கு கருத்து', 'சென்டிமென்டுக்கு சென்டிமென்ட்' என்று படம் நகர்கிறது. அனுபமா பரமேஸ்வரன், கவுதம் வாசுதேவ் மேனன், மிஸ்கின் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.'ராயன்' படத்தின் வெற்றிக்கு பின் நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்'. நடிகர் தனுஷின் அக்கா மகனான பவிஷ், இப்படம் மூலம் தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமாகிறார்; ஜோடியாக அனிகா சுரேந்திரன் நடித்திருக்கிறார்.இந்த வார வெளியீடான இந்த இரண்டு படங்களும் குறிப்பாக இளைஞர்களைக் கவர்வதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.இத்துடன் குடும்பஸ்தன், விடா முயற்சி போன்ற படங்களும் தொடர்ந்து ஓடுகின்றன.