வரும் முன் காப்போம் 1,196 பேர் பங்கேற்பு
அனுப்பர்பாளையம்:திருப்பூர் மாநகராட்சி சார்பில், வரும்முன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம், மாநகராட்சி, 10வது வார்டு ஆத்துப்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. மேயர் தினேஷ் குமார், தலைமை வகித்து, துவக்கி வைத்தார். துணை மேயர் பாலசுப்பிரமணியம், கமிஷனர் பவன்குமார், வார்டு கவுன்சிலர் பிரேமலதா உட்பட பலர் பங்கேற்றனர். பொது மருத்துவம், இருதய நோய், குழந்தை மருத்துவம் உள்ளிட்ட ஒவ்வொரு துறைக்கும் தனி தனி மருத்துவர்கள் என, 25 பேர் சிகிச்சை அளித்தனர். தேவைப்பட்டவர்களுக்கு இ.சி.ஜி., ஸ்கேன், சிறுநீர் உள்ளிட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.முகாமில், 1,196 பேர் பங்கேற்று மருத்துவ ஆலோசனை பெற்றனர். அவர்களில், 37 பேர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.