உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / துவக்கப் பள்ளியில் சேர 12 ஆயிரம் பேர் பதிவு

துவக்கப் பள்ளியில் சேர 12 ஆயிரம் பேர் பதிவு

உடுமலை;மாவட்டத்தில் உள்ள துவக்க பள்ளியில் சேர, 12 ஆயிரத்து, 686 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.அரசு பள்ளிகளில் அட்மிஷன் ஏப்ரல் இறுதியில் துவங்கியது. துவக்கத்தில் பெற்றோர் அவ்வளவு 'வேகமாக' அக்கறை காட்டவில்லை.ஐந்து முடித்து, ஆறாம் வகுப்பு, 8ம் வகுப்பில் இருந்து 9ம் வகுப்பு, 10ம் வகுப்பு முடித்து பிளஸ் 1 வேறு பள்ளியில் இணைய பெற்றோர், மாணவர் ஆர்வம் காட்டினர். இந்நிலையில், மே, 15க்கு பின் பள்ளிகளில் அட்மிஷன் சுறுசுறுப்பாகி உள்ளது.துவக்க, நடுநிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர், நான்கு ஆசிரியர்கள் தினசரி அட்மிஷன் பணிகளை கவனிப்பதால், பெற்றோர், மாணவ, மாணவியர் வந்து விபரங்களை கேட்டுச் செல்கின்றனர்.மாவட்டத்தில் உள்ள துவக்க பள்ளியில் சேர, 12 ஆயிரத்து, 686 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர் என கல்வித்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ