உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தொழில் முனைவோருக்கு உறுதுணை கனரா வங்கி நிர்வாக இயக்குனர் பெருமிதம்

தொழில் முனைவோருக்கு உறுதுணை கனரா வங்கி நிர்வாக இயக்குனர் பெருமிதம்

திருப்பூர்;கனரா வங்கி சார்பில், ஏற்றுமதியாளர் சந்திப்பு கூட்டம், திருப்பூர் ஜி.ஜி., ஓட்டலில் நேற்று நடந்தது.வங்கியின் நிர்வாக இயக்குனர் திபாஷிஷ் முகர்ஜி, மதுரை வட்ட பொது மேலாளர் கிருஷ்ணா மோகன் உள்ளிட்டோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். கருத்தரங்கில், கனரா வங்கியின் கருவூல பிரிவு, குறு - சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் பிரிவு உட்பட பல்வேறு திட்டம் சார்ந்த வங்கி பணிகள் குறித்து விளக்கப்பட்டது. வங்கி அதிகாரிகள், நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைகளை வழங்கினர்.முன்னதாக, கனரா வங்கியின் நிர்வாக இயக்குனர் திபாஷிஷ் முகர்ஜி பேசுகையில், ''தொழில் முனைவோருக்கான பல்வேறு கடனுதவி திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். நாட்டின் வளர்ச்சியில், எங்கள் வங்கியின் பங்கு அளப்பரியது. புதிய தொழில் முனைவோருக்கு என்றும் உறுதுணையாக இருப்பதுடன், பல்வேறு சலுகளை வழங்கி வருகிறோம்,'' என்றார்.கனரா வங்கியின் நிர்வாக இயக்குனர் திபாஷிஷ் முகர்ஜி, வங்கியின் தேசிய அளவிலான செயல்பாடுகள், அரசு திட்டங்கள் வாயிலாக மக்களுக்கான கடன் திட்ட சேவைகள், வங்கி சார்பில் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்கள் குறித்து விளக்கினார். கருத்தரங்கில், பொது மேலாளர்கள் கிருஷ்ணபிரசாத் (சர்வதேச வர்த்தக பிரிவு), ஜெனார்த்தன ராவ் (சர்வதேச வர்த்தக பிரிவு), பிரவீன் காப்ரா (நடுத்தர பெரு நிறுவன கடன் பிரிவு), சுனில்குமார் (குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவு) ஆகியோர் பேசினர்.தொடர்ந்து, குறுகிய கால மற்றும் நீண்டகால கடன் திட்டங்கள், மானியத்துடன் கூடிய தொழிற்கடன்கள் குறித்து, திருப்பூர் ஏற்றுமதியாளர்களுடன் கலந்துரையாடல் நடத்தினர். துணை பொது மேலாளர் வி.கே.பட் நன்றி கூறினார்.-----------------------திருப்பூரில் நேற்று கனரா சார்பில், ஏற்றுமதியாளர் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. அதில், வங்கியின் நிர்வாக இயக்குனர் திபாஷிஷ் முகர்ஜி பேசினார். அருகில், பொது மேலாளர்கள் கிருஷ்ணபிரசாத், ஜெனார்தன ராவ், கிருஷ்ண மோகன், பிரவீன் காப்ரா மற்றும் சுனில்குமார் யாதவ். கூட்டத்தில், பங்கேற்ற தொழில் துறையினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ