மேலும் செய்திகள்
மளிகை கடையில் குட்கா விற்பனை செய்தவர் கைது
07-Aug-2024
அனுப்பர்பாளையம் : புகையிலை பொருட்களை விற்பனை செய்த மளிகை கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர், பி.என்., ரோடு, காட்டன் மில் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜா, 41. இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடையின் பின் உள்ள குடோனில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.உடனே போலீசார், அப்பகுதிக்கு குடோனில் சோதனை மேற்கொண்டதில், விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 230 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து போலீசார் ராஜாவை கைது செய்தனர்.ராஜா, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்தது விசாரணையில் தெரிந்தது.
07-Aug-2024