உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 276 நீர் நிலையில் வண்டல் மண் எடுக்க அனுமதி

276 நீர் நிலையில் வண்டல் மண் எடுக்க அனுமதி

திருப்பூர்;திருப்பூர் மாவட்டத்தில் வண்டல் மற்றும் களி மண் எடுக்க அனுமதிக்கப்பட்ட நீர் நிலைகள் குறித்த விவரங்கள் மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.மாவட்டத்தில் மொத்தம், 276 நீர் நிலைகளில் மண் எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில், மண் அள்ளுவதற்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள் குறித்தும், மண் எடுக்கும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நீர் வளத்துறையின் கட்டுப்பாட்டில் உடுமலையில் உள்ள எட்டு ஏரிகள், தாராபுரத்தில் ஒரு ஏரி என ஒன்பது நீர்நிலைகள் மண் எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.மேலும் ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள, 267 குளம், குட்டைகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஊத்துக்குளி தாலுகாவில் 29 குளம், உடுமலை - 15, காங்கயம் - 51, தாராபுரம் - 58, பல்லடம் - 36, திருப்பூர் வடக்கு - 28; திருப்பூர் தெற்கு - 20, அவிநாசி - 26 மற்றும் மடத்துக்குளம் - 4 குளங்கள் என மொத்தம் 276 நீர் நிலைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.இந்த நீர்நிலைகள் அமைந்துள்ள இடம்; மண் அள்ள அனுமதிக்கப்பட்ட அளவு குறித்தும் இதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும், நீர் தேங்கியுள்ள இடம், கரை சேதப்படுத்தக் கூடாது. அனுமதித்த ஆழத்துக்கு மேல் மண் எடுக்காமல் அகலமாக, அனுமதி பெற்ற அளவு மட்டுமே எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளும் அதில் இடம் பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ