உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வாக்காளர் காலில் விழுந்து ஓட்டு சேகரித்த வேட்பாளர்

வாக்காளர் காலில் விழுந்து ஓட்டு சேகரித்த வேட்பாளர்

திருப்பூர்:திருப்பூர் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், அ.தி.மு.க., வேட்பாளர் அருணாசலம், நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.கருவம்பாளையம் மாரியம்மன் கோவில் அருகே, சுவாமியை வழிபட்டு, தனது பிரசாரத்தை துவக்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அப்போது, வயது முதிய வாக்காளர்களை சந்தித்து, காலில் விழுந்து ஆசி பெற்றார். தொடர்ந்து, பிரசார வேனில், கூட்டணி கட்சியினருடன் சென்று ஓட்டு சேகரித்தார்.பிரசாரத்தில், வேட்பாளர் அருணாசலம் பேசுகையில், ''திருப்பூர் பனியன் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது; தொழிலை பாதுகாக்க, தொழில் அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவேன் ,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்