உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சுற்றுச்சுவர் இல்லாத மயானம் போதை கும்பல் நடமாட்டம்

சுற்றுச்சுவர் இல்லாத மயானம் போதை கும்பல் நடமாட்டம்

திருப்பூர்:திருப்பூர் - பல்லடம் ரோட்டிலிருந்து இடுவம்பாளையம், பெரியாண்டிபாளையம் சென்று சேரும் வகையிலான ரிங் ரோடு உள்ளது. இதில் உள்ள குளத்துப்பாளையத்தில், மாநகராட்சிக்குச் சொந்தமான மயானம் உள்ளது.நீண்ட காலமாகப் பயன்பாட்டில் இருந்து வரும் இந்த மயானத்தை அப்பகுதியினர் பயன்படுத்தி வருகின்றனர். இதன் சுற்றுச் சுவர் இடிந்து சேதமடைந்துள்ளது. அதிக மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியாக உள்ளதால், பாதுகாப்பற்ற நிலையில் உள்ள மயானத்துக்குள் சட்ட விரோத கும்பல் நடமாட்டம் அதிகரித்துள்ளது.கேட்பாரற்ற நிலையில் உள்ளதால், மது அருந்துவோர், கஞ்சா பயன்படுத்துவோர் என வெளி நபர்கள் நடமாட்டம் மயானப் பகுதியில் உள்ளதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். மயான சுற்றுச்சுவரை மீண்டும் பாதுகாப்பான முறையில் அமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ