உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மையத்தடுப்பு உடைப்பு? காத்திருக்கும் அபாயம்

மையத்தடுப்பு உடைப்பு? காத்திருக்கும் அபாயம்

பல்லடம் : பல்லடத்தில் இருந்து வெள்ளகோவில் வரை, தேசிய நெடுஞ்சாலை, நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகின்றன. இதில், 70 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில், விரிவாக்க பணி முடிந்த இடங்களில், விபத்துகளை தடுக்கும் நோக்கில் மையத்தடுப்பு அமைக்கப்பட்டு வருகிறது. பல்லடம் பனப்பாளையம் சமத்துவபுரம் வரை அமைக்கப்பட்ட மையத்தடுப்பில் இடைவெளி விட வேண்டும் என, இப்பகுதியினர் கோரிக்கை விடுத்ததையடுத்து, போதிய இடைவெளி விட்டு அமைக்கப்பட்டது.இச்சூழலில், மற்றொரு இடத்தில் மையத்தடுப்பு உடைக்கப்பட்டு கற்கள் சிதறியுள்ளன. வாகனம் ஏதேனும் மோதி உடைந்ததா வேண்டுமென்றே உடைக்கப்பட்டதா என்பது தெரியவில்லை.மையத்தடுப்பு உடைக்கப்பட்ட இடத்துக்கு, 100 மீட்டர் துாரத்தில் தான் தாராபுரம் ரோடு பிரிவு உள்ளது. இங்கு இடைவெளி இருப்பதால் வாகன ஓட்டிகள் ரோட்டை கடக்கும்போது, விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மையத்தடுப்பை சீரமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !