உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குப்பை கிடங்காக மாறிய மேம்பாலம்

குப்பை கிடங்காக மாறிய மேம்பாலம்

உடுமலை:உடுமலை, ரயில்வே மேம்பாலத்திற்கு கீழ், குப்பை மற்றும் கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.உடுமலை ரயில்வே மேம்பாலத்திற்கு கீழ், பழனியாண்டவர் நகர், யூனியன் ஆபீஸ், தளி ரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் ரோடு உள்ளது. ரயில்வே வழித்தடத்துக்கு அருகில் உள்ள இந்த ரோட்டில், குப்பை, தொழிற்சாலை கழிவுகள், கட்டட கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது.இதனால், போக்குவரத்து பாதிப்பு மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இந்த ரோட்டில், நகராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, நகராட்சி கமிஷனர், நகர பொறியாளர் குடியிருப்புகள் உள்ள நிலையில், அதற்கு எதிரே கழிவுகள் கொட்டும் மையமாக மாறியுள்ளது.ரோட்டோரத்தில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை உடனடியாக அகற்றவும், குப்பை கொட்டுவதை தடுக்கவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை