உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாடுகளுக்கு கருச்சிதைவு நோய் தடுப்பூசி முகாம்: 18-ல் துவக்கம்

மாடுகளுக்கு கருச்சிதைவு நோய் தடுப்பூசி முகாம்: 18-ல் துவக்கம்

திருப்பூர்: பசு மற்றும் எருமைகளில், கருச்சிதைவு மற்றும் மலட்டுத்தன்மை ஏற்படுத்தும் நோய், 'புரூசெல்லா அபார்டஸ்' என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இந்நோய் பாதிக்கும் கால்நடைகளுக்கு, தீவிர காய்ச்சலும், சினை ஈனும் தருவாயில் கருச்சிதைவும் ஏற்படுகிறது.இந்நோயால், நஞ்சுக்கொடி தங்குதல், மீண்டும் சினை பிடிக்காமல் தாமதம் ஏற்படுவது போன்ற பாதிப்பு ஏற்படும். நஞ்சுக்கொடியை கையாளும் மனிதர்களுக்கும் தீவிர தாக்கத்தை ஏற்படுத்துகிறது.தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தில், கருச்சிதைவு நோய்க்கான தடுப்பூசி செலுத்தப்படுகிறது.நான்கு மாதம் முதல், எட்டு மாதம் வரையில் உள்ள கிடாரி கன்றுகளுக்கு மட்டும், 18ம் தேதி துவங்கி, அக்., 15ம் தேதி வரை தடுப்பூசி செலுத்தும் முகாம் நடக்கிறது. இலவசமாக ஒருமுறை தடுப்பூசி செலுத்தினால், அதன் ஆயுள் முழுவதும் இந்நோய் பாதிப்பு இருக்காது; எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.காளை கன்றுகளுக்கும், சினை மாடுகளுக்கும் இந்த தடுப்பூசியை எக்காரணம் கொண்டும் செலுத்தக்கூடாது. நான்கு முதல் எட்டு மாதம் வரையிலான, கிடாரி கன்றுகளுக்கு மட்டும், கால்நடை நிலையங்கள் மூலமாக நடக்கும் முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்படும்.கால்நடை வளர்ப்பவர்கள் இவ்வாய்ப்பை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை