மேலும் செய்திகள்
இ.சி.ஆரில் மாணவி கேள்விக்கு வாகன ஓட்டிகள் திணறல்
13-Aug-2024
போதையில் வாகனம் 167 வழக்குகள் பதிவு
24-Aug-2024
திருப்பூர் : சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம், கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. மாநகராட்சி கமிஷனர் பவன்குமார், எஸ்.பி., அபிஷேக் குப்தா, டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், போலீஸ் துணை கமிஷனர் கிரீஷ் யாதவ் மற்றும் வருவாய்த்துறை, போலீசார், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பங்கேற்றனர்.கலெக்டர் கிறிஸ்துராஜ் பேசியதாவது:அதிவேக பயணம், எதிர் திசையில் வாகனம் ஓட்டுவது, சிக்னல் செய்யாமல் வாகனத்தை திடீரென திரும்புவது, மொபைல் போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது உள்ளிட்டவற்றால், சாலை விபத்துக்கள் ஏற்படுகின்றன.டூவீலர்களின் வாகனம் ஓட்டுபவர் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர் ஹெல்மெட் அணியாதது, கார்களில் சீட் பெல்ட் அணியாமல் பயணிப்பது விபத்து மரணங்களுக்கு வழிவகுக்கிறது. விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்பு, கடுமையான காயங்களால், பல குடும்பங்கள் மனதளவிலும், பொருளாதார ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்படுகின்றன.திருப்பூரை விபத்து இல்லாத மாவட்டமாக மாற்றுவதை இலக்காக கொண்டு, போக்குவரத்து போலீசார் மற்றும் போலீசார் செயல்படவேண்டும். சாலைகளில் முக்கியமான இடங்களில், சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு பேனர்கள் வைக்கவேண்டும். விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு, கலெக்டர் பேசினார்.
13-Aug-2024
24-Aug-2024