உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சீரமைப்பு ஒருபுறம்; சீரழிவு மறுபுறம் நொய்யல் கரையோரம் நிர்மூலம்

சீரமைப்பு ஒருபுறம்; சீரழிவு மறுபுறம் நொய்யல் கரையோரம் நிர்மூலம்

திருப்பூர்;நொய்யல் ஆறு சீரமைப்பு பணிகள், ஒருபுறம் நடைபெற்றுக்கொண்டிருக்க, மறுபுறமோ சீரழிக்கும் நிகழ்வுகள் அரங்கேறுகின்றன.திருப்பூரில், நொய்யல் நதிக்கரையை மேம்படுத்தும் வகையில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் பல கோடி ரூபாய் மதிப்பில் திட்டமிட்டு பணி நடைபெற்று வருகிறது. ஆற்றின் இரு கரைகளிலும் அணைமேடு முதல் மணியகாரம்பாளையம் பாலம் வரையில், கான்கிரீட் சாய்வு தளம் அமைத்து கரையைப் பலப்படுத்துதல்; கரையை ஒட்டி இரு புறங்களிலும் ரோடு அமைத்தல் ஆகிய பணிகள் நடந்து வருகிறது. ஆற்றின் கரையில் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது.சீரமைப்பு ஒருபுறம்; சீரழிவு மறுபுறம்இது ஒருபுறம் இருந்தாலும், மற்றொரு புறத்தில் நொய்யலை சீரழிக்கும் விதமான நடவடிக்கைகளும் நடந்து வருகிறது.அணைக்காடு பகுதியில், எம்.ஜி.ஆர்., நகர் வழியாக நொய்யல் கடந்து செல்கிறது. இந்த பகுதியில் அதன் கரையோரத்தில், கட்டட கழிவுகள் லோடு லோடாகக் கொண்டு வந்து கொட்டப்பட்டுள்ளன.கட்டட இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள வாகனங்கள், இவற்றை இங்கு கொண்டு வந்து கொட்டிச் செல்வது வாடிக்கையாக மாறி வருகிறது. இதனால், நீர் நிலை மாசுபடும் அபாயம் உள்ளது. இப்பகுதியைக் கடந்து செல்வோரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.நீர் நிலைகளின் கரையில் இதுபோல் கழிவுகள் கொண்டு வந்து கொட்டி, அதை மாசுபடுத்தும் செயல்கள் தடுக்கப்பட வேண்டும். ---திருப்பூர், அணைக்காடு பகுதியில், நொய்யல் கரையோரம், கட்டடக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி