உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / எ ஸ்.எஸ்.ஐ., - போலீஸ்காரர் சஸ்பெண்ட் :இளைஞரிடம் லஞ்சம் பெற்றதால் அதிரடி

எ ஸ்.எஸ்.ஐ., - போலீஸ்காரர் சஸ்பெண்ட் :இளைஞரிடம் லஞ்சம் பெற்றதால் அதிரடி

திருப்பூர்;இளைஞர்களிடம் லஞ்சம் பெற்ற எஸ்.எஸ்.ஐ., மற்றும் ஆயுதப்படை போலீஸ்காரரை திருப்பூர் போலீஸ் கமிஷனர் லட்சுமி 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.திருப்பூர், திருமுருகன்பூண்டி போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்த எஸ்.எஸ்.ஐ., மருதப்பபாண்டியன், 50 மற்றும் ஆயுதப்படை போலீஸ்காரர் குணசுதன், 30 ஆகியோர் நேற்று முன்தினம் நள்ளிரவு ஜீப்பில் ரோந்து மேற்கொண்டனர். கோவை - சேலம் பைபாஸ் ரோட்டில் சென்ற போது, ரோட்டோரம் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. காரில், இரண்டு இளைஞர்கள் மதுபோதையில் இருந்தனர்.இருவரிடம் விசாரித்த போலீசார், அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகளை தவிர்க்க இவர்களிடம் 7 ஆயிரம் ரூபாய், ஐந்து பீர் பாட்டில், எலக்ட்ரானிக் சிகரெட் ஆகியவற்றை லஞ்சமாக பெற்றனர். ஆயுதப்படை போலீஸ்காரர் குணசுதன் இவர்கள் வைத்திருந்த விலை உயர்ந்த 'இயர் பேடை' திருடினார். இவற்றை இளைஞர்கள் போலீஸ் உயரதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதில் ஒரு இளைஞர் கோவை விமான நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.இதையடுத்து, எஸ்.எஸ்.ஐ., மற்றும் ஆயுதப்படை போலீஸ்காரரை 'சஸ்பெண்ட்' செய்து போலீஸ் கமிஷனர் லட்சுமி நேற்று உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை