உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மகளிருக்கு விழிப்புணர்வு

மகளிருக்கு விழிப்புணர்வு

திருப்பூர்; நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், தாராபுரம் ஒன்றிய அலுவலகத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு அரசு துறைகளின் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது. வட்ட வழங்கல் அலுவலர் செந்தில் பிரபு, வருவாய் ஆய்வாளர் நந்தகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் வெண்ணிலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.தீயணைப்பு துறை நிலைய அலுவலர் ராஜா ஜெய சிம்ம ராவ், உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ரகுநாதன், நல்லுார் நுகர்வோர் நல மன்ற செயலாளர் வேல்முருகன், தி கன்ஸ்யூமர் கேர் அசோசியேசன் துணை செயலாளர் அன்பழகன் ஆகியோர் பேசினர். கனரா வங்கி சார்பில், மகளிர் திட்ட கடன் மற்றும் காப்பீடு குறித்தும், ஸ்ரீ கிருஷ்ணா காஸ் ஏஜென்சி சார்பில், காஸ் பயன்பாடு குறித்து விளக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை