திருப்பூரில், பாரம்பரிய சுவையுடன், 'கமகம' மணத்துடன் உணவு வகைகளை தயாரித்து வழங்குவதில், அய்யன் கேட்டரிங் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது.உடுமலையில் பாரம்பரியமிக்க மணி விலாஸ் என்ற ஓட்டலை பல ஆண்டுகளாக நடத்திய அனுபவம்; தரமான உணவு தயாரிப்பு திறமையை ஒருங்கே பெற்று, திருப்பூரில், கடந்த, 10 ஆண்டுகளாக அறுசுவை உணவு படைத்து வருகிறது, அய்யன் கேட்டரிங்.அதன் உரிமையாளர்கள் ஐயப்பன், லலிதா ஆகியோர் கூறியதாவது; திருமணம், நிச்சயதார்த்தம், வரவேற்பு, காதணி விழா, சீர் என, அனைத்து வகை விேஷசங்களுக்கும், அறுசுவை உணவு தயாரித்து கொடுக்கிறோம். தற்போது 'டிரென்ட்'டில் உள்ள டிபன் வகைகள், 40 வகையான பண்டங்களுடன் மதிய உணவு, சைவம் மற்றும் அசைவ உணவுகளை, பாரம்பரிய முறைப்படி, சுவையாக, தரமாக தயாரித்து கொடுக்கிறோம்.குறைந்தபட்சம், 30 பேர் துவங்கி அதிகபட்சம் எத்தனை ஆயிரம் பேருக்கு வேண்டுமானாலும், பாரம்பரிய முறைப்படி உணவு தயாரித்து வழங்கும் கட்டமைப்பை பெற்றிருக்கிறோம். கூடுதல் விவரங்களுக்கு, 97900 22099, 98435 62556 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.