உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பாலபவன் குளோபல் பள்ளி பொதுத்தேர்வில் அசத்தல்

பாலபவன் குளோபல் பள்ளி பொதுத்தேர்வில் அசத்தல்

திருப்பூர்:திருப்பூரில் நடந்த பாலபவன் குளோபல் பள்ளி மாணவ, மாணவியர் பொதுத்தேர்வில் அசத்தியுள்ளனர்.திருப்பூர், கருமாரம்பாளையத்தில் உள்ள பாலபவன் குளோபல் மெட்ரிக் பள்ளி மாணவ, மாண வியர், பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2வில், சஞ்சய் முதலிடம், தெய்வகுமார் இரண்டாமிடம், ஸ்ரீஹரி மூன்றாமிடம் பிடித்தார். ஒரு மாணவர் வணிகவியல் பாடத்தில் சென்டம், இரு மாணவர்கள் தமிழ் பாடத்தில், 99 மற்றும் ஒரு மாணவர் பொருளியலில், 99 மதிப்பெண் பெற்றுள்ளனர்.பத்தாம் வகுப்பு தேர்வில், திவ்யதர்ஷினி முதலிடம், பிருந்தா இரண்டாமிடம், கவின் மூன்றாமிடம் பெற்றனர். மாணவர்களை பள்ளி தாளாளர் மாலதி முத்துரத்தினம், பள்ளி செயலாளர் சக்தி மிருதுளா நினைவு பரிசு வழங்கி பாராட்டினர். பிளஸ்1 வகுப்புக்கான அட்மிஷன் நடந்து வருகிறது. கூடுதல் விபரங்களுக்கு, 98430 25555எண்ணை தொடர்பு கொள்ளலாம் என பள்ளி நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி