மேலும் செய்திகள்
குட்கா கடத்தியவருக்கு வலை
26-Aug-2024
வெள்ளகோவில்:முத்துாரை சேர்ந்த சுப்பிரமணி, 24. கடந்த வாரம் இரவு தன் வீட்டின் முன் தனது டூவீலரை நிறுத்திச் சென்றார்.காலையில் பார்த்தபோது வீட்டு முன் நிறுத்தியிருந்த வாகனத்தை காணவில்லை. இது குறித்த புகாரின் பேரில் வெள்ளகோவில் போலீசார் விசாரணை நடத்தினர்.நேற்று முன்தினம் இரவு வெள்ளகோவில் - கரூர் ரோட்டில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டதில், அவ்வழியாக பைக்கில் வந்த ஒருவரை விசாரித்தனர். விசாரணையில், அந்நபர் கரூர், கீழ்வேலியூர் பகுதியைச் சேர்ந்த சரத்குமார், 32, என்பதும், பைக் திருட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் மேலும் சில இடங்களில் அவர் ஐந்து பைக்குளை திருடியது தெரிந்தது. அவற்றை மீட்ட போலீசார், சரத்குமாரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
26-Aug-2024