உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கண்காணிப்பு வளையத்தில் ஓட்டு எண்ணிக்கை மையம்

கண்காணிப்பு வளையத்தில் ஓட்டு எண்ணிக்கை மையம்

திருப்பூர், : திருப்பூர் லோக்சபா தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை மையம், கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகளிலும் நாளை மாலை ஓட்டுப்பதிவு முடிந்தபின், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஓட்டு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டுவரப்படுகிறது.ஓட்டுப்பதிவு செய்யப்பட்ட பேலட் யூனிட், கன்ட்ரோல் யூனிட் மற்றும் வி.வி.பேட் ஆகியவை, ஓட்டு எண்ணிக்கை மைய ஸ்டராங் ரூமில் வைக்கப்படுகின்றன. இதற்காக, தொகுதிக்கு ஒன்று வீதம் ஆறு ஸ்டராங் ரூம் மற்றும் ஆறு ஓட்டு எண்ணிக்கை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.ஓட்டுப்பதிவு முடிந்து, 45 நாட்களுக்கு பின்னரே ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஓட்டுப்பதிவு செய்யப்பட்ட இ.வி.எம்., இயந்திரங்கள், ஒன்றரை மாதங்களுக்கு ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்படுகிறது.ஒரு ஸ்ட்ராங் ரூமுக்கு 16 வீதம், ஆறு தொகுதிக்கான ஸ்டராங் ரூம்களுக்கு மொத்தம் 96 சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதுதவிர, ஆறு ஓட்டு எண்ணிக்கை அரங்குகளில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் ஒவ்வொரு டேபிளுக்கும் தனித்தனி கேமராக்கள்; கல்லுாரி நுழைவாயில், வளாகம் முழுவதும் என, மொத்தம் 300 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம், ஓட்டு எண்ணிக்கை மைய நிகழ்வுகள் அனைத்தும் முழு நேரமும் பதிவு செய்யப்படும். கன்ட்ரோல் ரூமிலிருந்து, கேமரா பதிவுகளை நேரடியாக பார்வையிடும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ