உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அமராவதி ஆயக்கட்டு பகுதிகளில் கருகிய நெற்பயிர்கள்; வேளாண்  அலுவலகம் முன் விவசாயிகள் போராட்டம்

அமராவதி ஆயக்கட்டு பகுதிகளில் கருகிய நெற்பயிர்கள்; வேளாண்  அலுவலகம் முன் விவசாயிகள் போராட்டம்

உடுமலை : அமராவதி புதிய ஆயக்கட்டு, கொமரலிங்கம், பாப்பான்குளம், துங்காவி, ஜோத்தம்பட்டி, வேடபட்டி, சாளரப்பட்டி, மடத்துக்குளம் உள்ளிட்ட பகுதிகளில், சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற் பயிர்கள் திடீரென கருகியது.15 முதல், 45 நாட்கள் வரை வளர்ந்த நெற்பயிர்கள், சீதோஷ்ண நிலை மாற்றம், பல்வேறு நோய்கள் தாக்கியதால், ஒரே சமயத்தில் கருகியதால், வேளாண் அதிகாரிகள், விஞ்ஞானிகள் குழு உரிய முறையில் ஆய்வு செய்து, நெற் பயிர்கள் கருகியதற்கான காரணங்களை கண்டறிய வேண்டும்.மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு, 40 ஆயிரம் ரூபாய் வரை இழப்பீடு வழங்குவதோடு, உடனடியாக வயல்களை அழித்து, மறு உழவு மேற்கொள்வதற்கு உதவ வேண்டும்,மறு சாகுபடியை கருத்தில் கொண்டு, அமராவதி அணை நிரம்பிய நிலையில் உள்ளதால், புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு நீர் திறப்பு காலத்தை நீடிக்க வேண்டும், என வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், மடத்துக்குளம் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.தயானந்தன் தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் வீரப்பன், மாவட்ட பொருளாளர் பாலதண்டபாணி, தாலுகா துணை செயலாளர் போஸ் உட்பட ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.விவசாயிகள் கூறியதாவது : அதிகாரிகள் கூட்டாய்வு என்ற பெயரில் ஒரு சில வயல்களில் ஆய்வு செய்து, பாதிப்புக்கான காரணத்தையும், இழப்பீடு வழங்குவது குறித்தும் கண்டு கொள்ளாமல், அலட்சியமாகவே பதில் கூறுகின்றனர்.பாதிக்கப்பட்ட வயல்களில் ஆய்வு செய்து, இழப்பீடு வழங்க வேண்டும். இதனை வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகள் வரும், 9ம் தேதி, திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை