உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வழித்தடமே இல்லாமல் வாங்கிய இடம் திட்டம் முடக்கம்; வரிப்பணம் விரயம்

வழித்தடமே இல்லாமல் வாங்கிய இடம் திட்டம் முடக்கம்; வரிப்பணம் விரயம்

பல்லடம் : பல்லடம் நகராட்சி குப்பைகளை உரமாக மாற்றுவதற்காக வாங்கப்பட்ட ஐந்தரை ஏக்கர் நிலத்துக்கு வழித்தடமே இல்லாததால், கடந்த 11 ஆண்டுகளாக, இந்த இடம் முடங்கியிருக்கிறது. மக்கள் வரிப்பணம் இவ்வாறு வீணாக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.பல்லடம் நகராட்சி, 18 வார்டுகளில் சேகரமாகும் குப்பைகளை தரம் பிரிக்கவும், உரமாக மாற்றுவதற்கும் நகராட்சி பகுதியில் கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், வார்டு பகுதிகளில் குப்பைகள் தேங்கி நின்று சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.இவ்வாறு, 2013ல், கேத்தனுார் கிராமத்தில், குப்பை கொட்ட ஐந்தரை ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. மக்களின் வரிப்பணத்தில் வாங்கப்பட்ட இந்த இடத்துக்கு செல்வதற்கான வழித்தடமே இல்லை என்பது பின்னரே தெரிந்தது.இதனால், 8.50 லட்சம் ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்ட இந்த இடம், பயன்பாடின்றி கைவிடப்பட்டது. தற்போதைய நிலவரப்படி, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த இடம், எந்தவித பயன்பாடும் இன்றி முட்புதர்கள் மண்டி காடு போல் காட்சியளித்து வருகிறது.மக்கள் வரிப்பணம் வீணாக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் நகராட்சி நிர்வாகம் மீது அதிருப்தியடைந்துள்ளனர்.--கேத்தனுார் கிராமத்தில், 11 ஆண்டாக பயன்பாடின்றி கிடக்கும் பல்லடம் நகராட்சிக்கு சொந்தமான இடம்.

எப்படி ஒப்புதல் தந்தார்கள்?

வழித்தடமே இல்லாத இந்த இடம், நகராட்சி கவுன்சிலர்களின் ஒப்புதலுடன், வாங்கப்பட்டுள்ளது. கடந்த, 11 ஆண்டாக மக்கள் வரிப்பணத்தை வீணடித்ததுடன், தற்போது வரை இதை மாற்று பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் வீணடித்து வருகின்றனர்.எவ்வித ஆய்வும் செய்யாமல் நிலத்தை வாங்கிய அப்போதைய நகராட்சி தலைவர் ராமமூர்த்தி (தி.மு.க.,), வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்டோரிடம் நிலத்தின் தொகையை வசூலித்து நகராட்சியில் செலுத்த வேண்டும். சோலார் பேனல் அமைத்தல், மரங்கள் வளர்த்து பராமரித்தல் உள்ளிட்ட மாற்று பயன்பாட்டிற்கு நிலத்தை கொண்டு வர வேண்டும்.- அண்ணாதுரை, தலைவர், பல்லடம் தாலுகாசமூக ஆர்வலர் கூட்டமைப்பு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

தமிழன்
ஜூன் 29, 2024 15:54

11 வருடம் கழித்ததால் அந்த நிலத்தின் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது என்று நீங்களே சொல்கிறீர்கள் எனவே அருகில் எப்படியும் திமுக காரருக்கு இடம் இருக்கும் அவரை வாங்கிக் கொண்டு 11 வருடத்திற்கு முந்தைய விலையை அரசுக்கு செலுத்தி விட்டால் விஷயம் முடிந்து விடும் திமுகவும் தன் கட்சி தொடருக்கு கோடீஸ்வரனான வாய்ப்பு வழங்க முடியும்


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி