உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பூத் சிலிப் வரவில்லை

பூத் சிலிப் வரவில்லை

திருப்பூர்:திருப்பூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில்பூத் சிலிப்கள் முறையாக வாக்காளர்களுக்குச் சென்று சேரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.ஓட்டுப் பதிவுக்கு ஒரு வாரம் முன்பிருந்தே, பூத் சிலிப்கள் உரிய ஓட்டுச் சாவடி நிலை அலுவலர்களுக்கு வழங்கி, உரிய முறையில் வினியோகிக்க அறிவுறுத்தப்பட்டது.பெரும்பாலான அலுவலர்கள் இதை முறையாக வீடு வீடாகத் தேடிச் சென்று வழங்கினர். சிலர், வார்டு வாரியாக ஒரு பொது இடத்தில் அமர்ந்து அப்பகுதியினரை வரவழைத்து அதை வழங்கினர்.ஒரு சிலர் வாக்காளர்களைத் தேடிப்பிடித்து வழங்க முடியாமல் தேக்கி வைத்துக் கொண்டனர்.திருப்பூர் தெற்கு தொகுதியில், இதுபோல் ஏராளமான வாக்காளர்கள் தங்களுக்கு பூத் சிலிப் வந்து சேரவில்லை என்று புகார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை