உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பஸ் ஸ்டாண்டா? கார் ஸ்டாண்டா?

பஸ் ஸ்டாண்டா? கார் ஸ்டாண்டா?

அனுப்பர்பாளையம்;திருப்பூர் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், மிமீசல் உள்ளிட்ட தொலைதுார இடங்களுக்கும், கோவை, கோபி, மேட்டுபாளையம் போன்ற பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.ஒவ்வொரு ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் நிற்க பஸ் ஸ்டாண்டில் அதற்கென தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.பஸ்கள் அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் நிற்காமல் அனைத்து பஸ்களும் பஸ் ஸ்டாண்டின் ஒரு பகுதியில் மட்டும் நின்று பயணிகளை ஏற்றி செல்கிறது.பஸ்கள் அனைத்தும் ஒரே பகுதியில் நிற்பதால் பயணிகள் நெருக்கடிக்கு உள்ளாகின்றனர்.மற்ற பகுதி முழுவதும் பஸ்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. அந்த பகுதியில் வாகன ஸ்டாண்ட் போல வரிசையாக வெளி நபர்கள் தங்கள் கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி உள்ளனர். பஸ் நிற்காததால், அப்பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் பல மாதங்களாக பூட்டி கிடக்கின்றன.அப்பகுதியில் உள்ள இருக்கைகளை 'குடி'மகன்கள் மற்றும் பிச்சைக்காரர்கள் ஆக்கிரமித்து உள்ளனர்.காவலாளி நியமிக்கப்படாததால், இரவு நேரத்தில் மது அருந்துதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடக்கின்றன.பஸ் ஸ்டாண்டை முழு செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை