புதர் மண்டிய பூங்கா ஒதுக்கீட்டு நிலங்கள்
உடுமலை; உடுமலை அண்ணா குடியிருப்பு பகுதியில் உள்ள, பூங்கா, பொது ஒதுக்கீட்டு இடங்கள் பயன்பாடு இல்லாமல், வீணாகி வருகிறது.உடுமலை நகராட்சி, பழநி ரோட்டில், கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் சார்பில், 1982ல், துவக்கப்பட்ட அண்ணா குடியிருப்பு பகுதியில், 650க்கும் மேற்பட்ட வீடுகளில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.சுற்றுப்புறத்திலும், ஏராளமான குடியிருப்புகள் என வளர்ச்சியடைந்த பகுதியாக உள்ளது. அண்ணா குடியிருப்பு உருவாக்கப்பட்டபோது, மக்கள் பயன்பாட்டிற்காக, பூங்கா, விளையாட்டு மைதானம், பொது பயன்பாட்டு இடங்கள் பயன்படுத்தாமல், புதர் மண்டி காணப்படுகிறது.இவ்வாறு, மூன்று இடங்களில், 2 ஏக்கருக்கு மேல், பொது பயன்பாட்டு இடங்கள் பயன்படுத்தாமல், வீணாகி வருகிறது.எனவே, பொது மக்கள் பயன்பெறும் வகையில், பூங்கா மற்றும் இளைஞர்கள் விளையாட்டு திறனை மேம்படுத்த மைதானம் அமைக்க வேண்டும்.