உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மக்களுடன் முதல்வர்: மனுக்கள் குவிந்தன

மக்களுடன் முதல்வர்: மனுக்கள் குவிந்தன

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் முதல்கட்டமாக, மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சிகளில் வார்டுவாரியாக மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடத்தப்பட்டது. இரண்டாம் கட்டமாக, ஜூலை முதல், 13 ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராமங்களுக்கான முகாம் படிப்படியாக தற்போது நடத்தப்பட்டுவருகிறது.மாவட்டத்தில், 2ம் கட்டத்தில் இதுவரை நடந்த, 72 முகாமில், மொத்தம், 59 ஆயிரத்து 407 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.மனுக்களை பெறும் அதிகாரிகள், விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது மக்களின் வேண்டுகோள்.

இன்றைய முகாம்

அவிநாசி ஒன்றியம் செம்பியநல்லுார், வேலாயுதம்பாளையம் ஊராட்சிகளுக்கான முகாம், செந்துார் மஹாலிலும், பல்லடம் ஒன்றியம் சுக்கம்பாளையம், கே. அய்யம்பாளையம் ஊராட்சிகளுக்கு செம்மிபாளையம் கே.என்புரம் விக்னேஷ் மஹாலிலும், தாராபுரத்தில், கரையூர் ஸ்ரீ சக்தி முருகன் திருமண மண்டபத்திலும், குண்டடத்தில், ஈஸ்வர செட்டிபாளையம் சமுதாய நலக்கூடத்திலும் இன்று, மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி