உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஒப்பந்ததாரருடன் கவுன்சிலர் மோதல்

ஒப்பந்ததாரருடன் கவுன்சிலர் மோதல்

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி, 18வது வார்டுக்கு உட்பட்ட கொடிக்கம்பம், பாப்பண்ண நகரில் ரோடு போடும் பணி நடக்கிறது. அப்பகுதியில் சாக்கடை கால்வாய் அமைப்பது போன்ற பணிகள் உள்ள நிலையில், தற்போது ரோடு போட்டால், மீண்டும் தோண்டும் நிலைமை ஏற்படும் என்று மக்கள் மத்தியில் புகார் எழுந்தது. நேற்று மாலை அப்பகுதியில், 4வது வீதியில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிகள் முடிந்த பின், இரு நாட்கள் கழித்து ரோடு போடுங்கள் என்று, ஒப்பந்ததாரர் வேலுசாமியிடம், கவுன்சிலர் தாமோதரன் கூறினார். அதற்கு ஒப்பந்ததாரர் மறுத்தார். இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. திருப்பூர் வடக்கு போலீசார் பேச்சு நடத்தி, சமாதனப்படுத்தி அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி