மேலும் செய்திகள்
மாவட்ட பா.ஜ., ஆலோசனை
03-Feb-2025
திருப்பூர்; திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், பண்டிட் தீனதயாள் உபாத்தியாயாவின், 57 வது நினைவு நாளுக்கு புஷ்பாஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, மாவட்ட அலுவலகத்தில் நேற்று நடந்தது.அவரது உருவ படத்துக்கு மாலை அணிவித்து பா.ஜ.,வினர் மரியாதை செலுத்தினர். மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் செந்தில்வேல், மாநில பொதுக்குழு உறுப்பினர் வெள்ளியங்கிரி, மாவட்ட துணை தலைவர்கள் ஈஸ்வரன், பாலு உட்பட பலர் பங்கேற்றனர். மேலும், வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட வடக்கு, தெற்கு, பல்லடம் என, 19 மண்டலங்களில், 1033 பூத்களில் பா.ஜ., வினர் மரியாதை செலுத்தினர்.l பொங்கலுார், தொங்குட்டிபாளையத்தில் வடக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் சீனிவாசன் தலைமையில் நடந்தது. அவரது படத்துக்கு மலர்துாவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில், மாநில பொதுக்குழு உறுப்பினர் குப்புசாமி, பொங்கலுார் கிழக்கு மண்டல செயலாளர் பொன்னுசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.பெருந்தொழுவில் நடந்த நிகழ்ச்சியில் ஊராட்சி பொறுப்பாளர்கள் கோவிந்தசாமி, செந்தில், கனகராஜ், சதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
03-Feb-2025