உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் பக்த விஜயம் சொற்பொழிவு

ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் பக்த விஜயம் சொற்பொழிவு

திருப்பூர்;'காட் இந்தியா டிரஸ்ட்', ஸ்ரீகுருவாயூரப்பன் சத்சங்கம் சார்பில், 'நாம சப்தாஹம்' மற்றும் பக்த விஜயம் சொற்பொழிவு நடந்து வருகிறது.திருப்பூர், காலேஜ்ரோடு, காவேரி வீதியில் உள்ள, ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் நடைபெற்று வரும், நாம சப்தாஹம் மற்றும் பக்த விஜயம் சொற்பொழிவில், ஸ்ரீமுரளீதர சுவாமிகளின் சீடர்களான, ஸ்ரீகன்யா சகோதரிகளான ஸ்ரீகன்யா, ஷிவ்கன்யா ஆகியோர் சொற்பொழிவாற்றி வருகின்றனர்.காலை, 6:00 முதல், மாலை, 6:00 மணி வரை, அகண்ட மஹாமந்திர கீர்த்தனம், மாலை, 6:30 முதல், இரவு 8:30 மணி வரை, பக்த விஜயம் சொற்பொழிவு நிகழ்ச்சி நடக்கிறது. நாளை மாலை, 5:00 மணிக்கு நகர சங்கீர்த்தனம், மாலை, 6:00 மணிக்கு கூட்டுப்பிரார்த்தனை நடக்க உள்ளது. திருப்பூர் பக்தர்கள், மஹாமந்திர கீர்த்தனத்தில் பங்கேற்று, இறையருளுக்கு பாத்திரமாகலாம் என ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை