உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தீபாவளி, பொங்கலை விட கூட்டம் போக்குவரத்து அதிகாரிகள் திணறல்

தீபாவளி, பொங்கலை விட கூட்டம் போக்குவரத்து அதிகாரிகள் திணறல்

திருப்பூர்:லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது. திருப்பூர் உட்பட பல இடங்களில், நேற்று முன்தினம் இரவு வரை நிறுவனங்கள் இயங்கியதால், 80 சதவீதத்தினர் இரவு 9:00 மணிக்கு மேல் தான் பஸ் ஏறி சொந்த ஊர் போக முடிவெடுத்தனர். இதற்கேற்ப பஸ் வசதி இல்லாததால் பொதுமக்கள் ஆவேசத்துடன் போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இந்த வாக்குவாதம், பல இடங்களில் நேற்று மதியம் வரை தொடர்ந்து. திருப்பூர் புது பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களில் பயணியரின் மறியல் போராட்டமும் நடந்தது.போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:பொங்கல், தீபாவளி பண்டிகை நாட்களில் முதல் நாள், மறுநாள், பண்டிகை நாள் என பயணியர் சீரான இடைவெளியில் பயணிப்பர். தற்போது நிறுவனங்கள் 18ம் தேதி நள்ளிரவு வரை செயல்பட்டதால், ஒரே நேரத்தில் அதிகளவில் பயணியர் பஸ் ஏற வந்தனர்.கடந்த, 18ம் தேதி இரவு அனுப்பி வைத்த பஸ்கள், நள்ளிரவு, அதிகாலையில் திரும்பி பஸ் ஸ்டாண்ட் வருவதற்குள் இரு மடங்கு பயணியர் வந்ததால், ஒன்றும் செய்ய முடியவில்லை. எவ்வளவு பஸ்கள் திட்டமிட்டாலும், பயணியர் இப்படி ஒரே நேரத்தில் குவிந்ததால் குழப்பம் ஏற்பட்டது.மதுரை சித்திரை திருவிழா துவங்கியுள்ள நிலையில், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் சிறப்பு வைபவம், வரும், 21, 22ம் தேதிகளில் நடக்கிறது. வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு மூன்று நாட்களுடன் சேர்த்து தொடர் விடுமுறை எடுத்துக் கொண்ட பலர் மதுரை மாவட்டத்துக்கு படையெடுத்ததால், பஸ்களில் கூட்டம் திடீரென அதிகரித்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை