மேலும் செய்திகள்
தி.மு.க., செயல்வீரர்கள் ஆலேசானைக் கூட்டம்
27-Aug-2024
அவிநாசி ஒன்றிய மற்றும் நகர தி.மு.க., செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், நகர அவைத்தலைவர் ராயப்பன் தலைமையில் நடந்தது. நகர செயலாளர் வசந்தகுமார் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாஷ், வடக்கு மாவட்ட அவை தலைவர் நடராஜன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் சரவணன் நம்பி, மாநகராட்சி கவுன்சிலர் ராதாகிருஷ்ணன், வர்த்தகர் அணி அமைப்பாளர் மணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். தி.மு.க.,வின் பவள விழா ஆண்டான இந்தாண்டு, கிளைகள் தோறும், கட்சி கொடி ஏற்றுதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
27-Aug-2024