குழியை மூடுங்க...திருப்பூர் - பல்லடம் ரோடு, லோட்டஸ் மருத்துவமனை எதிரில், நடுரோட்டில் உள்ள குழியை மூட வேண்டும். வாகன ஓட்டிகள் தடுமாறி விழும் வகையில் குழி உள்ளது.- ராமச்சந்திரன், பல்லடம் ரோடு. (படம் உண்டு)ரேஷன் கடை அவலம்திருப்பூர், 19 வது வார்டு, எஸ்.எஸ்., நகரில் செயல்பட்டு வந்த ரேஷன் கடை மழையால் சேறும், சகதியுமாக மாறி, கடை இடம் மாற்றப்பட்டது. தற்போது, மண் கொட்டி மூடும் நிலைக்கு மாற்றப்பட்டுள்ளது.- ரஞ்சித், எஸ்.எஸ்., நகர். (படம் உண்டு)வீணாகும் மின்சாரம்திருப்பூர், கே.டி.சி., ஸ்கூல் ரோடு, அய்யன் நகரில் பகலிலும் தெருவிளக்கு எரிந்து மின்சாரம் வீணாகிறது. விளக்குகளை சரியான நேரத்துக்கு அணைத்து மின்சாரம் வீணாவதை தடுக்க வேண்டும்.- கார்த்திகா, அய்யன் நகர். (படம் உண்டு)கம்பம் இடம் மாறணும்!பல்லடம், வடுகபாளையம், எஸ்.என்.ஆர்., நகரில் மின்கம்பத்தை இடமாற்றாமல், அப்படியே ரோடு போட்டுள்ளனர். மின்கம்பத்தை இடமாற்ற வேண்டும்.- செல்வம், வடுகபாளையம். (படம் உண்டு)சுத்தம் செய்யுங்க...திருப்பூர், 40வது வார்டு, இடுவம்பாளையம், கிழக்குமேடு தண்ணீர் டேங்க் அருகே, கால்வாய் அடைப்பு கழிவுகளை அள்ளிச் செல்லாமல், அப்படியே குவித்து வைத்துள்ளனர்.- செந்தில்குமார், இடுவம்பாளையம். (படம் உண்டு)பணிகள் படுமந்தம்பல்லடம் - அருள்புரம் இடையே ரோட்டோரத்தில் நடந்து வரும் கால்வாய் பணியை வேகப்படுத்த வேண்டும். பணி மந்தமாக நடப்பதால், கடைகளை திறக்க முடியாத நிலை உள்ளது.- கிருஷ்ணமூர்த்தி, பல்லடம். (படம் உண்டு)கேபிள் அகற்றலாமே!திருமுருகன்பூண்டி, திருமுருகநாதசுவாமி கோவில் அருகே ரோட்டோரத்தில் கிடக்கும் கேபிள் ஒயர்களை அகற்ற வேண்டும். நடந்து செல்லும் பாதசாரிகளுக்கு இடையூறாக உள்ளது.- ராஜகோபால், பூண்டி. (படம் உண்டு)ரோடு போடுங்க...திருப்பூர், 31வது வார்டு, லட்சுமி நகர் - வெங்கடேசபுரம் ரோடு பல ஆண்டாக பராமரிப்பு இல்லாமல் குண்டும் குழியுமாக, ஜல்லிக்கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. புதியதாக ரோடு போட வேண்டும்.- மணியன், வெங்கடேசபுரம். (படம் உண்டு)வீணாகும் தண்ணீர்திருப்பூர், தாராபுரம் ரோடு, உஷா தியேட்டர் சந்திப்பு, குப்புசாமிபுரம் முதல் வீதியில், மெயின் குழாய் உடைந்து அடிக்கடி தண்ணீர் வீணாகிறது.- செல்வக்குமார், குப்புசாமிபுரம். (படம் உண்டு)திருப்பூர், பி.என்., ரோடு, கூத்தம்பாளையம் - பெருமாநல்லுார் வழியில், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே தரைப்பாலத்தின் கீழ் கேட்வால்வு பழுதாகி, 24 மணி நேரமும் தண்ணீர் வீணாகிறது.- சங்கர் சதீஷ், கூத்தம்பாளையம். (படம் உண்டு)திருப்பூர், புது ராமகிருஷ்ணபுரம் எக்ஸ்டன்சன், பாப்பநாயக்கன்பாளையத்தில் கேட்வால்வு பழுதாகி, தண்ணீர் தொடர்ந்து வீணாகி கொண்டே இருக்கிறது.- கார்த்திகேயன், பாப்பநாயக்கன்பாளையம். (படம் உண்டு)திருப்பூர், பெரியகடை வீதி, பெரிய மசூதி சந்திப்பு சாலையில் குழாய் உடைந்து, இரண்டு மாதமாகி தண்ணீர் ரோட்டில் வழிந்தோடி வீணாகிறது.- அப்துல்ஜாபர், பெரியகடைவீதி. (படம் உண்டு)ரியாக் ஷன்சீரானது சாலைதிருப்பூர், 15 வேலம்பாளையம், பிளேக் மாரியம்மன் கோவில் நான்கு வழி சாலை சந்திப்பில், சாலை சேதடைந்து, மழைநீர் தேங்கியிருந்தது. 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியான பின், ரோடு போடப்பட்டுள்ளது.- தாமோதரன், 15 வேலம்பாளையம். (படம் உண்டு)வேகத்தடை பணி வேகம்திருப்பூர் பல்லடம் ரோடு, மீனம்பாறையில் வாகனங்கள் வேகமாக சென்று வருவதால், விபத்து அபாயம் இருப்பதாக, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இதனால், வேகத்தடை அமைக்கும் பணி துவங்கியுள்ளது.- செல்வராஜ், மீனம்பாறை. (படம் உண்டு)