வறட்சி எதிரொலி காரணம்; கழிவுபஞ்சு விலை ஏறுமுகம்
பொங்கலுார்; கார்த்திகை முதல் கடந்த மூன்று மாதங்களாக மழை பெய்யவில்லை. இதனால், மேய்ச்சல் நிலங்கள் கருகிவிட்டன.தற்போது, பி.ஏ.பி., மூன்றாம் மண்டலம் இரண்டாம் சுற்று பாசனத்திற்கு திறக்க வேண்டிய தண்ணீரும் சர்க்கார் பதி மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட பிரச்னையால் திறக்கப்படவில்லை. இதனால், கால்நடைகளுக்கு பசுந்தீவனங்கள் கிடைப்பது பிரச்னையாக உருவெடுத்துள்ளது.எனவே, கால்நடைகளை வறட்சியில் இருந்து காப்பாற்ற விவசாயிகள் கழிவுப்பஞ்சின் பக்கம் தங்கள் கவனத்தைதிருப்பி உள்ளனர். முன்பெல்லாம் விவசாய நிலங்களில் தொழு உரமாகவே கழிவுப் பஞ்சு பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது விவசாயிகள் போட்டி போட் டுக் கொண்டு கால்நடை தீவனத்திற்காக கழிவுப் பஞ்சை வாங்க துவங்கியுள்ளனர்.இதனால், இதுவரை கிலோ எட்டு ரூபாய்க்கு விற்பனையான கழிவு பஞ்சு, தற்பொழுது கிலோ பத்து முதல், 13 ரூபாய் வரை விலை போகிறது. கழிவு பஞ்சின் விலை அதிகரித்துள்ளது, கால்நடை வளர்க்கும் விவசாயிகளை கவலை கொள்ள செய்துள்ளது.