உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாநகராட்சி பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள்

மாநகராட்சி பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள்

திருப்பூர்;திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி என்.எஸ்.எஸ்., அலகு - 2 சார்பில், சந்திரகாவி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியும் இணைந்து, பள்ளியில் காமராஜர் பிறந்த தினம் முன்னிட்டு, கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடின.பள்ளி தலைமையாசிரியர் ஞானாம்பாள் தலைமை வகித்தார். கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசுகையில், ''பள்ளிப்பருவத்தில் கனவுகளை தீர்மானித்துக் கொள்ள வேண்டும். தங்களது திட்டத்தை தற்போதே திட்டமிட வேண்டும். தினமும், புத்தகம் படிக்க வேண்டும். தரமான உணவுகளை உட்கொள்ள வேண்டும்,'' என்றார்.என்.எஸ்.எஸ்., அலகு - 2 திட்ட மாணவ செயலர்கள் சுந்தரம், கிருஷ்ணமூர்த்தி, லோகேஷ், கோகுல் ஆகியோர் தலைமையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ