மேலும் செய்திகள்
நிட்ஷோ இன்று நிறைவு
11-Aug-2024
திருப்பூர்;திருப்பூர் மாநகராட்சி முதல் வார்டு செட்டிபாளையம் பகுதியில் உள்ள இந்திரா நகர் குடியிருப்பு, விரிவாக்கம் செய்யப்பட்ட மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டதாகும். இங்கு உரிய கழிவு நீர் கால்வாய் வசதி இல்லை. டிஸ்போசபிள் பாயின்ட் இன்றி கழிவு நீர் கடந்து செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. ரோட்டில் பாய்ந்தும், தனியார் இடத்தில் தேங்கியும் காணப்படுகிறது. துர்நாற்றம், கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது.தற்போது கழிவுநீர் நிலத்தில் இறங்கி, சுற்றுப்பகுதி வீடுகளில் உள்ள நிலமட்டத் தொட்டிகளில் ஊற்று போல் சென்று கலக்கிறது. தொட்டியில் உள்ள நீரைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.கவுன்சிலர் தனலட்சுமி கூறுகையில், ''இப்பகுதியில் கழிவுநீர் கொண்டு செல்ல கால்வாய் அமைக்க வசதியில்லை. கழிவுநீர் தேங்கும் பகுதியிலிருந்து மோட்டார் மூலம் உறிஞ்சி எடுத்து குழாய் பதித்து செட்டிபாளையம் பகுதியில் பிரதான கால்வாய் கொண்டு சேர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான திட்ட அறிக்கை தயார் செய்து நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர் தரப்பில் தாமதமாகிறது. விரைவில் பணி துவங்கப்படும்'' என்றார்.---விஜய் கட்சிக்கொடிகள்அகற்ற உத்தரவுதிருப்பூர், ஆக. 26-திருப்பூரில் பல்வேறு இடங்களில் முன் அனுமதியின்றி, கொடிக்கம்பங்கள் நடப்பட்டு கொடி பறக்கவிடப்பட்டுள்ளதை அகற்ற வேண்டும் என்று போலீஸ் தரப்பு அறிவுறுத்தியதாக தமிழக வெற்றிக்கழகத்தினர் கூறினர்.நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழக கொடியை கடந்த 22ம் தேதி அறிமுகம் செய்தார். திருப்பூரில் போலீசார், உள்ளாட்சி அமைப்புகளில் முறையான முன்அனுமதி பெறாமல், பல்வேறு இடங்களில் கட்சிக்கொடி பறக்க விடப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. 'கட்சியினரே முன்வந்து கொடிகளை அகற்ற வேண்டும். முன் அனுமதி மற்றும் ஒப்புதல் பெற்ற பின், கொடிகளை ஏற்றிக் கொள்ளலாம்,' என நேற்று, போலீசார், மாநகராட்சி தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.கட்சியின் மத்திய மாவட்ட தலைவர் பாலமுருகன் கூறுகையில்,'27ம் தேதிக்குள் அனுமதி வாங்கி, அனைத்து பகுதிகளிலும் கொடியேற்றப்படும். தற்போது, கொடியேற்றப்பட்ட இடங்களில், முன்வந்து கொடிகளை அகற்ற வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். மாநில தலைமை ஆலோசனைக்கு ஏற்ப செயல்படுவோம்,' என்றார்.----வர்த்தக மையம் அமைக் கயோசனைதிருப்பூர், ஆக. 26-தமிழ்நாடு குடிமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு மைய மாநில மாநாடு, திருப்பூர், முத்தணம்பாளையத்தில் நேற்று நடந்தது. மாநில நிறுவன தலைவர் கர்ணன் தலைமை வகித்தார். துணை தலைவர் பாலகிருஷ்ணன், பொருளாளர் ஆனந்தன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் மணிகண்டராஜன் வரவேற்றார்.திருப்பூரில் அனைத்து சாலைகளையும் சீரமைக்கவேண்டும். கோவில்வழி பஸ் ஸ்டாண்ட் முன்பு, நான்கு வழிச்சாலையை கடந்துசெல்ல மக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்; அங்கு, சிக்னல் அமைத்து, போக்குவரத்து போலீசாரை நியமிக்கவேண்டும்.பெரிச்சிபாளையம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை முன் சாக்கடை கால்வாய் அமைக்கப்படவில்லை. கால்வாய் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். டீக்கடைகளில் கலப்பட டீத்துாள் பயன்படுத்துவதைத் தடுக்க ேவண்டும்.ஆடை உற்பத்தியாளர்களும், வெளிநாட்டு வர்த்தகர்களும், வர்த்தக பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கு ஏதுவாக, திருப்பூரில் சர்வதேச தரத்தில் பொது மையம் ஏற்படுத்தவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாவட்ட தலைவர் ராமர் நன்றிகூறினார்.---மாடு வர்த்தகம்திருப்பூர்:பழையகோட்டையில் நேற்று நடந்த காங்கயம் இன மாடுகளுக்கான சந்தைக்கு 70 கால் நடைகள் வந்திருந்தன. காங்கயம் இன மாடுகள் 20 ஆயிரம் - 96 ஆயிரம் ரூபாய்; பசுங்கன்றுகள் 10 ஆயிரம் - 40 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது; மொத்தம் 38 கால்நடைகள், 15 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.---ரயில் நிலையத்தில் தமிழில் அறிவிப்புதிருப்பூர், ஆக. 26-திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் முதல் பிளாட்பார்ம், டிக்கெட் கவுன்டர் அருகே அறிவிப்பு பலகை உள்ளது. இதில் அன்றைய தினம் ரயில்கள் வந்து செல்வது குறித்த 'அப்டேட்' நிலவரம், தாமதம், ரயில் ரத்து உள்ளிட்ட விபரங்கள் வெளியிடப்படும்.இந்த அறிவிப்பு ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே எழுதப்பட்டு வந்தது. இந்நிலையில், திருச்சி - பாலக்காடு டவுன் பாசஞ்சர் ரயில் (எண்:16843) இயக்கம், வரும், 31ம் தேதி வரை இருகூர் - போத்தனுார் இடையே தடம் மாற்றப்பட்டது; சிங்காநல்லுார், பீளமேடு, வடகோவை, கோவை ஜங்ஷன் செல்லாதென அறிவிக்கப்பட்டது.இது, அறிவிப்பு பலகையில் தமிழில் எழுதப்பட்டுள்ளது. இதை பயணிகள் வரவேற்றுள்ளனர்.---ரத்த தான முகாம்திருப்பூர்:தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரத்த தான முகாம் நேற்று நடந்தது. திருப்பூர் நகரம், யாசின்பாபு கிளை அலுவலகத்தில் இம்முகாம் நேற்று நடைபெற்றது. திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை மருத்துவர் குழு இம்முகாமை நடத்தின. இதில் 35 பேர் ரத்த தானம் வழங்கினர்.மாவட்ட செயலாளர் ஷாஜஹான், மருத்துவர் அணி செயலாளர் முகமது நியாஸ் முன்னிலை வகித்தனர். கிளை நிர்வாகிகள் இஸ்மாயில், ஜான் பாஷா, முஸ்தபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.---முருங்கை வரத்து சரிவுவெள்ளகோவில்:வெள்ளகோவிலில் இயங்கும் கொள்முதல் நிலையத்துக்கு கடந்த வாரம் 12 டன் முருங்கை விற்பனைக்கு வந்தது. நேற்று 10 டன் கரும்பு முருங்கை மட்டும் வந்தது. கடந்த வாரம், பத்து ரூபாய்க்கு விற்ற முருங்கை, நேற்று கிலோ, 22 ரூபாய்க்கு விற்றது. மழை சரியான பருவத்தில் பெய்யாமல், பூக்கள் இருக்கும் சமயத்தில் பெய்ததால் பூக்கள் உதிர்ந்தன. இதனால் விளைச்சல் சரிந்து, விலை அதிகரித்தது.---மனதின் குரல் நிகழ்ச்சிபா.ஜ.வினர் பார்வைதிருப்பூர், ஆக. 26-பிரதமர் மோடியின் மன் கீ பாத் நிகழ்ச்சி (மனதின் குரல்) நேற்று நடந்தது. இதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், மாவட்ட தலைமை அலுவலகம் உட்பட, 19 மண்டலங்களில், ஆயிரத்து, 33 பூத்களில் இந்த நிகழ்ச்சி சிறப்பாக ஒளிபரப்பப்பட்டது. கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர். உறுப்பினர் சேர்க்கை பயிற்சி முகாமும் மண்டல அளவில் நடந்தது. வீரபாண்டி மண்டலத்தில் நடந்த முகாமில், மாவட்ட தலைவர் செந்தில்வேல் பங்கேற்றார்.-----சமூக விரோதிகளின் புகலிடமாக பாழடைந்த கட்டடங்கள்திருப்பூர், ஆக. 26-முதலிபாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் பாழடைந்த கட்டடங்கள் பயன்பாட்டில் இல்லாததால் சமூக விரோதிகளின் புகலிடமாக மாறியுள்ளது.திருப்பூர் அடுத்த முதலிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கோவை வீட்டு வசதி வாரியத்தால் கடந்த 1987ம் ஆண்டில் குடியிருப்புகள் உருவாக்கப்பட்டது. அப்போது மக்களின் வசதிகளுக்காக ஆரம்ப பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி என, ஆறு கட்டடங்கள் கட்டப்பட்டது. தற்போது, இரண்டு கட்டடங்கள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. மீதமுள்ள, நான்கு அரசு கட்டடங்களும் பல ஆண்டுகளாக பயன்படுத்தப் படாமல் புதர் மண்டி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. கஞ்சா, குட்கா, போதை ஊசிகள் பயன்படுத்துவது, போதையில் குடியிருப்பு பகுதிகளில் மோதி கொள்வது போன்ற செயல்கள் அன்றாடம் அரங்கேறி வருகிறது. பொதுமக்கள் பெரும் அச்சத்துடன் வசிக்கின்றனர்.பொதுமக்கள் கூறுகையில், ''சமூக விரோதிகளை பொதுமக்கள் தட்டி கேட்டால், மிரட்டுகின்றனர். போலீசாரிடம் தொடர்ந்து புகார் தெரிவித்த நிலையில், கடந்த டிச., மாதம் புறக்காவல் நிலையத்தை திறந்தனர். அதுவும், வீட்டு வசதி வாரிய கட்டடத்தில் அனுமதி பெறாமல் திறக்கப்பட்டதால், மீண்டும் மூடப்பட்டது. போலீசாரின் கண்காணிப்பு இல்லாததால் போதை ஆசாமிகள் 'அட்ராசிட்டி' செய்து வருகின்றனர். அமைச்சர், கலெக்டரிடம் தெரிவித்தும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. கட்டடங்களை மாற்று துறையினர் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.முதலிபாளையம் ஊராட்சி தலைவர் மயூரி பிரியாவிடம் கேட்டதற்கு, ''போலீசாரிடம் புகார் தெரியப்படுத்தியதால், ரோந்து வருகின்றனர். கட்டடங்கள் வீட்டு வசதி வாரிய கட்டுப்பாட்டில் உள்ளது. ஊராட்சியிடம் ஒப்படைக்கவில்லை. நாங்கள் என்ன செய்ய முடியும்?'' என்றார்.------பக்தர்களின் பாதங்களை நனைக்கும் தண்ணீர்திருப்பூர், ஆக. 26-திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், ராஜகோபுரம் நிலைப்படிக்கு வெளியே, சிறிய வரப்பு போன்று அமைத்து, அதற்குள், தண்ணீர் ஒரு இன்ச் அளவுக்கு தேங்கி நின்று, செல்வது போல் அமைக்கப்பட்டுள்ளது. தண்ணீர் குழாய் அமைத்து, நுண்ணீர் பாசனம் போல் தண்ணீர் விழும் வகையில் செய்துள்ளனர். இதன் மூலம் கோவிலுக்கு வரும் பக்தர்கள், தங்கள் பாதங்களை தண்ணீரில் நனைத்து செல்லும் வசதி செய்யப்பட்டுள்ளது.கோவில் அலுவலர்கள் கூறுகையில், 'அறங்காவலர் குழு ஏற்பாட்டில், இத்தகைய வசதி செய்துள்ளோம். பக்தர்கள் வெளியே இருந்து வரும் போது, பாதங்களை தண்ணீரில் நனைத்து உள்ளே வரும்வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதிக அளவு பக்தர் வரும் கோவில்களில், நோய் தொற்று பரவலை தடுக்க இத்தகைய வசதி செய்வது வழக்கம். இதேபோல், வீரராகவப்பெருமாள் கோவிலிலும் அமைக்கப்பட உள்ளது,' என்றனர்.--நாய்களை துாக்கிலிட்டு கொன்றதாக புகார்திருப்பூர், ஆக. 26-இரண்டு நாய்களை துாக்கிலிட்டு, கட்டையால் அடித்து கொன்றதாக, பிராணிகள் வதை தடுப்பு சங்கத்தினர், மூலனுார் போலீசில் புகார் அளித்துள்ளனர்.மூலனுார் அடுத்துள்ள முளையாம்பூண்டி, கோவில்மேட்டுப்புதுார் அருகே உள்ள முத்துசாமி கோவில் பகுதியில், இரண்டு தெருநாய்களை, கொடூரமாக துாக்கிலிட்டும், அடித்தும் சிலர் கொன்றுள்ளனர்.கிட்டுசாமி, 75 என்பவரின் வளர்ப்பு நாய், மற்றொரு தெருநாய் என, இரு நாய்களையும் துாக்கிலிட்டு கொன்றுள்ளனர். இதுகுறித்து, திருப்பூர் மாவட்ட பிராணிகள் வதை தடுப்பு சங்க செயற்குழு உறுப்பினர் நாகராஜ், மூலனுார் போலீசிடம் புகார் அளித்துள்ளார்.சிலர் கூட்டாக சேர்ந்து, 24ம் தேதி மதியம் 2:00 மணிக்கு, நாய்களை வேப்பமரத்தில் துாக்கில் துாக்கிலிட்டு, கட்டையால் அடித்து கொன்றுள்ளனர். சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.----மாநில துப்பாக்கி சுடும் போட்டிதிருப்பூர், ஆக. 26-வெள்ளகோவில், லக்கமநாயக்கன்பட்டி அடுத்த ஆண்டிபாளையத்தில், மாநில துப்பாக்கி சுடும் போட்டி நேற்றுமுன்தினம் துவங்கியது.மாநில துப்பாக்கி சுடுதல் அசோசியேஷன், கொங்கு நாடு துப்பாக்கி சுடுதல் சங்கம் நடத்தும் இப்போட்டியை அமைச்சர் சாமிநாதன், எஸ்.பி., அபிேஷக் குப்தா ஆகியோர் துவக்கி வைத்தனர்.மாநில துப்பாக்கி சுடுதல் அசோசியேஷன் தலைவர் சீதாராமராவ், செயலாளர் வேலுசங்கர், கொங்குநாடு துப்பாக்கி சுடுதல் கிளப் செயலாளர் லோகேஸ்வரன், பொருளாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வரும், 30ம் தேதி வரை நடைபெற உள்ள இப்போட்டியில், தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் அசோசியேஷன், துப்பாக்கி சுடும் பயிற்சி அமைப்புகளை சேர்ந்த, 250க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர். 'ட்ராப்', 'டபுள் ட்ராப்', 'ஸ்கீட்' உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடக்கிறது.-----சிவாகமம் சிறப்பு சொற்பொழிவுதிருப்பூர், ஆக. 26-ஸ்ரீகுருகுலம் ஆகம வித்யார்த்திகள் சேவா சமிதி மற்றும் அதீத சாத்ரஸம்பத் பாடசாலை சார்பில், மாதம் தோறும் சிவாகம சிறப்பு சொற்பொழிவு நடந்து வருகிறது. அதன்படி, மூன்றாவது சிறப்பு சொற்பொழிவு, சிவன்மலை உஜ்ஜன் மஹாலில் நேற்று நடந்தது.கூனம்பட்டி ஆதீனம் ஸ்ரீசரவண மாணிக்கவாசக சுவாமிகள் தலைமை வகித்தார். கூனம்பட்டி திருமடம் நடராஜ சுவாமிகள், மருதுறை ஆதீனம் அருண் ஆலாலா சுந்தர சுவாமிகள், அவிநாசி ஆரூரசிவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பெங்களூரு வேதபாடசாலை முதல்வர் சுந்தரமூர்த்தி சிவம் தலைமையிலான, வேதம் பயின்ற மாணவர்கள், வித்யார்த்திகள் வேதாகமத்தை விளக்கி பேசினர். விழாவை ஸ்ரீகுருல ஆகம வித்யார்த்திகள் சேவா சமிதி, அதீத சாத்ர சம்ஸத் வேதாகம சமஸ்கிருத பாடசாலை, பெங்களூரு வாழும் கலை மையத்தினர் நடத்தினர். வித்யார்த்திகள், பல்வேறு புராணங்கள், வேத ஆகம வழிகாட்டுதல்களை விளக்கி பேசினர்.''சிவாகமம் குறித்து இன்றைய தலைமுறையினர் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குருவருளும், திருவருளும் இருந்தால் மட்டுமே, சிவாகமத்தை அறிய முடியும். சிவாகமம், திருமுறை பற்று இருந்தால் மட்டுமே, சிவ அனுபூதி என்ற சிவனடியாருக்கு நன்மை கிடைக்கும்' என்று அருளாசி வழங்கினர்.சென்னை விவேகானந்தா கல்லுாரி பேராசிரியர் அபிராமசுந்தர சிவாச்சாரியார், விழாவை ஒருங்கிணைத்தார். சிவன்மலை சிவசுந்தரசிவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.---சிவனின் முக்கண் எவை தெரியுமா?திருப்பூர், ஆக. 26-''தேவாரம் உயிராகவும், உழவாரம் உடலாகவும், சித்தாந்தம் அறிவாகவும் இருக்கின்றன; இவை மூன்றுமே, சிவபெருமானுக்கு முக்கண்களாக இருக்கின்றன,'' என, தஞ்சை தமிழ் பல்கலைக்கழக பேராசிரியர் நல்லசிவம் பேசினார்.திருவையாறு ஐயாரப்பர் திருமுறை மன்றம், திருப்பூர் சிவனடியார் திருக்கூட்டம் சார்பில், திருமுறை பண்ணிசை வகுப்பு, திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் டி.எம்.ஆர்., தோட்டத்தில் உள்ள நால்வர் அரங்கில் ஒவ்வொரு மாதமும், நான்காவது ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.பயிற்சியில், ஒன்று முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு கட்டணம் இல்லை. பயிற்சி அளித்துவரும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் நல்லசிவம் பேசியதாவது:பன்னிரு திருமுறைகள் உயிர்களுக்கு வழிகாட்டுகின்றன. இயல், இசை, நாடகம் என, தமிழ்மொழிக்கு முத்தமிழ் இருப்பது போல், சிவவழிபாட்டிலும் மும்முறை இருக்கிறது. தேவாரம் உயிராகவும், உழவாரம் உடலாகவும், சித்தாந்தம் அறிவாகவும் இருக்கிறது.இவை மூன்றுமே சிவபெருமானுக்கு, மூன்று கண்களாக இருக்கின்றன. தேவாரம் பாடினால், உள்ளம் செம்மையாகும்; உழவாரம் செய்தால், உடல் வலுவாகும்; சிவ சித்தாந்தத்தை அறிவதால், அறிவு மேம்படும். பன்னிரு திருமுறைகளே பழம் தமிழ் இசைகளாக இருந்துள்ளது; அதிலிருந்தே, கர்நாடக சங்கீதம் போன்றவை பிறந்துள்ளன. அத்தகைய சிறப்பு வாய்ந்த தேவாரம் பண்ணிசை பாடலை, அனைவரும் கற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.---'சிந்துவெளி பண்பாடு அறிவிப்பு'நுாற்றாண்டு கோலாகலம்அவிநாசி, ஆக. 26-தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் (த.மு.எ.க.ச.,), 'நவீன மனிதர்கள்' அமைப்பு இணைந்து, 'சிந்துவெளி பண்பாடு' அறிவிக்கப்பட்டதன் நுாற்றாண்டை கொண்டாடும் நிகழ்ச்சி, அவிநாசி, சேவூர் ரோட்டில் உள்ள கொங்கு கலையரங்கத்தில் நடந்தது. சுற்றுச்சூழல் எழுத்தாளர் கோவை சதாசிவம் தலைமை தாங்கினார். ரோட்டரி ஆளுநர் - தேர்வு, பூபதி முன்னிலை வகித்தார்.அவிநாசி த.மு.எ.க.ச., செயலாளர் தினகரன் வரவேற்புரை ஆற்றினார். அவிநாசி அரசு கல்லுாரி பேராசிரியர் மணிவண்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். த.மு.எ.க.ச., மாநில துணைத்தலைவர் நந்தலாலா 'அசதிக்கு சுடர் தந்த தேன்' என்ற தலைப்பில் அறிமுக உரை வழங்கினார்.சிந்துவெளி பண்பாட்டு ஆய்வாளரும், முன்னாள் கலெக்டருமான பாலகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார். 'நவீன மனிதர்கள்' அமைப்பை சேர்ந்த பாரதி சுப்பராயன், த.மு.எ.க.ச., மாநில செயற்குழு உறுப்பினர் ஈஸ்வரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.செந்தில்குமார் நன்றி கூறினார். உடுமலை த.மு.எ.க.ச., மக்கள் கலைக்குழு துரையரசன் பாடல்கள்; பொன் மண் மத்தாளம் கலைக்குழுவினரின் நிகழ்ச்சி நடந்தன.-----கூட்டுறவு பணியாளர் மாநாடுதிருப்பூர், ஆக. 26-திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணியாளர் சங்க மாவட்ட மாநாடு, சி.ஐ.டி.யு., அலுவலகத்தில் நேற்று நடந்தது.தலைவர் கவுதமன் தலைமை வகித்தார். துணை தலைவர் கருப்பசாமி அஞ்சலி தீர்மானம் வாசித்தார். துணை செயலாளர் சரவணமூர்த்தி வரவேற்றார். சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் ரங்கராஜன், மாநாட்டை துவக்கி வைத்தார்.செயலாளர் மகேந்திரன், சங்கத்தின் செயல் அறிக்கையையும், பொருளாளர் சுரேஷ், வரவு - செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளன மாநில தலைவர் கிருஷ்ணமூர்த்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தலைவராக கவுதமன், செயலாளராக மகேந்திரன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.பொது வினியோக திட்டத்துக்கு தனி அரசுத்துறை ஏற்படுத்த வேண்டும்; ரேஷன் கடைகளில் கழிப்பிட வசதியை செய்து கொடுக்க வேண்டும்.கடைகளுக்கு முழு ஒதுக்கீடு செய்து, எடை குறைவில்லாமல் பணியாளர் முன்னிலையில் எடை சரிபார்த்து வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.--பனைமரங்கள் பராமரிப்புதிருப்பூர், ஆக. 26-திருப்பூர், ஆண்டிபாளையம் குளக்கரையை சுற்றிலும், பனை விதைகள் நடப்பட்டது. குளத்தை துார்வாரி சுத்தம் செய்ததும், நிலத்தடி நீர்மட்டத்தையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க, பனைவிதைகள் நடப்பட்டன.குளக்கரையில் நட்ட விதைகள் முளைத்து, பனைமரங்கள் வளர்ந்துள்ளன. இந்நிலையில், பனை காக்கும் நண்பர்கள் அமைப்பினர், நேற்று பனை மரங்களை பராமரித்தனர். சீமைக்கருவேல முட்செடிகளை வெட்டி அப்புறப்படுத்தினர். பனைமரத்துக்கு கவாத்து செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.---அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததேபல்லடம், ஆக. 26--பல்லடம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 2004 முதல்- 2006ம் ஆண்டு வரை, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு படித்த முன்னாள் மாணவ, மாணவியரின் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று பள்ளி வளாகத்தில் நடந்தது.முன்னாள் மாணவர்கள் தங்கள் படிப்பு, வேலை, குடும்பம் உள்ளிட்டவை குறித்து அனைவரிடமும் பகிர்ந்து கொண்டனர். ஆடல், பாடல், விளையாட்டு என, பல்வேறு நிகழ்ச்சிகளை தொடர்ந்து, அனைவரும் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர்.தாங்கள் படித்த அரசு பள்ளி மற்றும் அரசு கல்லுாரிக்கு அலுவலக உபகரணங்களை வழங்கினர். ஆண்டுதோறும் இதேபோல் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். முன்னாள் ஆசிரியர்கள் தீபா, பூங்கொடி, ராமச்சந்திரன், லோகநாயகி, கந்தசாமி, பாலாமணி ஆகியோரும் பங்கேற்றனர்.நிகழ்ச்சியை ஒருங்கிணைந்த முன்னாள் மாணவர்கள், வசந்தி, கார்த்திகேயன் ஆகியோர் கூறுகையில், ''பள்ளி படிப்பு முடிந்த பின், மாணவ, மாணவியர் சிலர் தவிர மற்றவர்கள் தொடர்பில் இல்லை. தொழில், வேலை, திருமணம் உள்ளிட்ட காரணங்களால், பல்வேறு மாவட்டங்களில் உள்ளோம்.ஏற்கனவே தொடர்பில் இருந்த மாணவ - மாணவியர் மூலம் அனைவருக்கும் அழைப்பு விடுத்தோம். இதில் 50க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். பல ஆண்டுக்கு பிறகு, மீண்டும் நண்பர்களை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது'' என்றனர்.---உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சிஅனுப்பர்பாளையம், ஆக. 26-திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காந்தி நகர் பகுதி கட்சியினருக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி குமரானந்தபுரம் கற்பக விநாயகர் கோவில் மண்டபத்தில் நடந்தது. பகுதி செயலாளர் கருணாகரன் தலைமை வகித்தார். துணை செயலாளர் சின்னசாமி முன்னிலை வகித்தார்.மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., விஜயகுமார் ஆகியோர் கட்சியினருக்கு உறுப்பினர் அட்டை வழங்கி பேசினர். பொள்ளாச்சி ஜெயராமன், பூத் ஏஜென்ட்களிடம் கடந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., பெற்ற வாக்குகள் குறித்து ஆய்வு நடத்தினார்.சில பூத்களில் வாக்குகள் குறைவுக்கு காரணம் என்ன என கேட்டறிந்த அவர், 'சட்டமன்ற தேர்தலில் அதிக ஓட்டுகள் பெற வேண்டும். அதற்காக பாடுபட வேண்டும்' என்று அறிவுறுத்தினார்.---அசல் மதிப்பெண் சான்றுதிருப்பூர், ஆக. 26-பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச், 26 முதல் ஏப்ரல், 8ம் தேதி வரை நடந்தது. மே, 10ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானது. மாவட்டத்தில், 30, 180 பேர் தேர்வெழுதினர்; இவர்களில், 13,220 மாணவர், 14,659 மாணவியர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களில், 1,490 பேரும், மாணவியரில், 811 பேரும் என, 2,301 பேரும் தேர்ச்சி பெறவில்லை. தேர்வெழுதிய மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் பள்ளிகளிலும், தனித்தேர்வர்களுக்கு அவர்கள் தேர்வெழுதிய மையங்களிலும், வரும், 29ம் தேதி வழங்கப்பட உள்ளது என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.---ஆர்ப்பாட்டம் நடத்த மா.கம்யூ., முடிவுதிருப்பூர்:மா.கம்யூ., கட்சியின் திருப்பூர் அடுத்த 15 வேலம்பாளையம் கிளை மாநாடு கட்சி அலுவலகத்தில் நடந்தது. கட்சி நிர்வாகி சுப்பிரமணியம், தலைமை வகித்தார். நகர செயலாளர் நந்தகோபால், மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். கிளை செயலாளராக சரவணகுமார், தேர்ந்தெடுக்கப்பட்டார்.ரேஷன் கடைகளில் நடைப்பெறும் முறைகேடுகளை களைந்திட வலியுறுத்தி அடுத்த மாதம் 9ம் தேதி, 15 வேலம்பாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது; விண்ணப்பித்த அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.---காஸ் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்திருப்பூர்:மாவட்ட அளவிலான காஸ் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், வரும் 30ம் தேதி மாலை, 4:00 மணிக்கு நடக்கிறது. மாவட்டத்திலுள்ள அனைத்து காஸ் முகவர்கள், எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். நுகர்வோர், தங்கள் காஸ் புத்தகத்துடன் பங்கேற்று, புகார்களை தெரிவிக்கலாம்.
11-Aug-2024