உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இ.எஸ்.ஐ., திட்டப்பயன்தொழிலாளர் அறிவது அவசியம்

இ.எஸ்.ஐ., திட்டப்பயன்தொழிலாளர் அறிவது அவசியம்

பல்லடம்;நாகர்கோவிலைச் சேர்ந்தவர் திருநீலகண்டன், 28. மனைவி சந்தியா, 22. பல்லடத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் சர்வீஸ் இன்ஜினியராக வேலை பார்த்து வந்த திருநீலகண்டன், கடந்த ஆண்டு பிப்., மாதம் வாகன விபத்தில் உயிரிழந்தார்.பல்லடம் இ.எஸ்.ஐ., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், திருநீலகண்டனின் மனைவி சந்தியாவிடம், 1,23,950 ரூபாய் உதவி தொகை; மாதந்தோறும், 15,240 ரூபாய் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை ஆகியவற்றை கோவை மண்டல உதவி இயக்குனர் பெருமாள் வழங்கினார். அலுவலக மேலாளர் ராஜா, காசாளர் ஜெயகுமார், அலுவலர் சவுந்தர்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.உதவி இயக்குனர் கூறுகையில், 'மாதம், 21 ஆயிரம் ரூபாய் ஊதியம் பெறும் தொழிலாளர்கள் அனைவரும் இ.எஸ்.ஐ., சமூக பாதுகாப்பு பயன்கள் பெற உரிமையுள்ளவர்கள். இ.எஸ்.ஐ., காப்பீட்டில் உள்ள நபர் பணியின் போது விபத்தில் இறந்தால், காப்பீட்டாளரை சார்ந்துள்ள குடும்பத்துக்கு உதவி பயன் வழங்கப்படும். அவரது மனைவி மற்றும் பெற்றோருக்கு வாழ்நாள் முழுவதும்; ஆண் குழந்தைகளானால், 25 வயது வரையும், பெண் குழந்தைகளானால் திருமணமாகும் வரையும் சார்ந்தோர் உதவி பயன் கிடைக்கும். இ.எஸ்.ஐ., காப்பீடு திட்டத்தின் கீழ் உள்ள தொழிலாளர்கள் இது குறித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை