திருப்பூர்;திருப்பூரின் பிரதான ரோடுகளில் ஒன்றாக பெருமாநல்லுார் ரோடு (பி.என்., ரோடு) உள்ளது. மேட்டுப்பாளையம், 60 அடி ரோடு சந்திப்பு முதல் புதிய பஸ் ஸ்டாண்ட், பிச்சம்பாளையம் பிரிவு வரை இந்த ரோடு பயணத்துக்கு ஏற்ற வகையில் உள்ளது. போயம்பாளையம் பிரிவிலில் இருந்து மும்மூர்த்தி நகர் வரை சாலை சேதமாகி குண்டும் குழியுமாக உள்ளது.சாலை நடுவே, வலது, புறம் இடது புறம் கோடு போட்டது போல் சாலை சேதமாகியுள்ளது; வாகன ஓட்டிகள் நிலை குலைகின்றனர்.குறிப்பாக, பூலுவபட்டி சிக்னல் சந்திப்புக்கு, 100 மீ., முன் இடதுபுறம் பகுதி தார் சாலையே இல்லை. நெடுஞ்சாலைத்துறையின் தொடர் பராமரிப்பு இல்லாததால், தார் முற்றிலும் பெயர்ந்து, மண் மேலெழுந்து, மழைக்கு சேறும், சகதியுமாகவே மாறி விட்டது.வழிநெடுகிலும் குழிகள் நிறைந்து காணப்படுவதால், டூவீலரில் வரும் பலரும் தடுமாறி விழுந்து செல்கின்றனர்.மழை பெய்து விட்டால், இரண்டடிக்கு மழைநீர் தேங்கி விடுகிறது. எங்கு குழி இருப்பது என்பது நன்றாக வாகனம் ஓட்டுபவர்களால் கூட கண்டறிய முடியவில்லை. பூலுவப்பட்டி முதல் பாண்டியன் நகர், அண்ணா நகர் வரை சாலை நடுவே திடீர் பள்ளங்கள், மேடுகள் காணப்படுகிறது. முறுக்கினால் போச்சு
'எஸ்கலேட்டரை' சற்று முறுக்கினாலும், உடனே பிரேக் பிடித்து தடுமாற வேண்டிய நிலை உள்ளது. டூவீலர் ஓட்டிகள் நிலையே இப்படியென்றால், கனரக வாகனங்கள், அதிக பாரத்துடன் செல்லும் வாகனங்கள் பெருத்த சிரமம் தான்.திருப்பூர், பி.என்., ரோடு நிலை மாதக்கணக்கில் இவ்வாறாகவே உள்ளது. நெடுஞ்சாலைத்துறையினர் எட்டிக்கூட பார்ப்பதில்லை. உயிர்பலி வாங்கும் முன், நெடுஞ்சாலைத் துறையினர் சாலையை சீரமைக்க வேண்டும்.