உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மண் அள்ளிய வாகனங்கள் சிறைபிடிப்பு: தாசில்தார் கூறியும் விட மறுத்த விவசாயிகள்

மண் அள்ளிய வாகனங்கள் சிறைபிடிப்பு: தாசில்தார் கூறியும் விட மறுத்த விவசாயிகள்

பல்லடம்;பல்லடம் அருகே, கிராவல் மண் அள்ளிய வாகனங்களை சிறைபிடித்த விவசாயிகள், தாசில்தார் கூறியும் விட மறுத்தனர். பல்லடம் அடுத்த, கரைப்புதுார் ஊராட்சி, காளிநாதம்பாளையம் குட்டையில், வண்டல் மண், களிமண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வண்டல் மண்ணே இல்லாத இக்குட்டையில், கிராவல் மண் எடுக்கப்பட்டு வருவதாக கூறி, இப்பகுதி விவசாயிகள் மண் அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்த வாகனங்களை சிறை பிடித்தனர். விவசாயிகள் கூறுகையில், 'காளிநாதம்பாளையம் குட்டையில் களிமண்ணோ, வண்டல் மண்ணோ கிடையாது. இருப்பினும் இக்குட்டையில் வண்டல் மண் அள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கிராவல் மண் அள்ளி வந்த வாகனங்களை முதல் நாளே எச்சரித்தோம். இனி வரமாட்டோம் என்று கூறிவிட்டு, தொடர்ந்து நான்கு நாட்களாக கிராவல் மண் அள்ளி வருகின்றனர். குட்டையில் வண்டல் மண் இல்லை என்று தெரிந்தும், பகிரங்கமாக கிராவல் மண் கடத்தி வருகின்றனர். வாகனங்களை பறிமுதல் செய்வதுடன், சட்டவிரோதமாக கிராவல் மண் அள்ளியவர்கள் மீது திருட்டு வழக்கு பதிவு செய்ய வேண்டும்' என்றனர். அங்கு வந்த பல்லடம் தாசில்தார் ஜீவா, விவசாயிகளிடம், ''வண்டல் மண் இல்லை என்பதால் தான், மண் அள்ளும் பணியை நிறுத்தச் சொல்லி உள்ளோம். வாகனங்களை முதலில் விடுங்கள்; இனி எடுத்தால் நான் பார்த்துக் கொள்கிறேன்'' என்றார். தாசில்தார் கூறியதை ஏற்காத விவசாயிகள், 'வாகனங்களை விட மாட்டோம். முதலில் வாகனங்களை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யுங்கள்' என்றனர். இதனால், தாசில்தார் திரும்பி சென்றார். ----2 படங்கள் 5 காலம்காளிநாதம்பாளையம் குட்டையில் மண் அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்த வாகனங்கள்.வாகனங்களைச் சிறைபிடித்த அப்பகுதி விவசாயிகள்.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி கூறுகையில், 'வண்டல் மண்ணே இல்லாத குளம் - குட்டைகளில் கிராவல் மண் கடத்தப்பட்டு வருவதாக தொடர்ச்சியாக புகார் அளித்து வருகிறோம். காளிநாதம்பாளையம் குட்டையிலும் அவ்வாறே கிராவல் மண் அள்ளப்பட்டுள்ளது. ஆனால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகின்றனர். வழக்கு பதிவு செய்யும் வரை வாகனங்களை விட மாட்டோம்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

B RAJARATHINAM
ஆக 24, 2024 13:44

தாசில்தார் யோக்கியமான வராக இருந்தால் வழக்கு பதிவுக்கு வழி செய்திருப்பார்.காசு வாங்கி கூவுபவராக இருந்ததால் தான் வண்டியை விட சொல்லிஇருக்கிறார். .


sampath kumar
ஆக 23, 2024 22:36

விவசாயிகளே குட்டையை ஆழப்படுத்த விடுங்கள்.இப்படித்தான் மேட்டூர், பவானிசாகர் அனைகள் 10 அடி முதல் 20 அடி வரை மண் எடுக்க வேண்டும். வண்டல் மண் இருந்தால் தான் எடுக்க வேண்டும் என்ன வேண்டாம். தங்கள் பகுதிக்கு பாதிப்பு இல்லை என்றால் மண் அள்ளி குளத்தை ஆழப்படுத்துங்கள்.


Bhaskaran
ஆக 23, 2024 20:56

வட்டாட்சியர் வாங்கிய காசுக்கு வஞ்சனை இல்லாமல் சேவை செய்வதை பாராட்டியே தீரவேண்டும்


krishnan
ஆக 23, 2024 17:20

ஒரே ஒரு லாரியை எரித்து விட உத்தரவு இட்டால் இனி இது தொடராது.


KRISHNAN R
ஆக 23, 2024 13:20

சுந்தரா டிராவல்ஸ்... தள்ளு தள்ளு


VENKATASUBRAMANIAN
ஆக 23, 2024 08:47

தாசில்தார் மீதும் வழக்கு பதிய வேண்டும். சஸ்பெண்டு செய்ய வேண்டும்.


Mani . V
ஆக 23, 2024 07:40

ஆமா, தாசில்தார் ஏன் விடச் சொன்னார்? ஏதே வாங்கிய காசுக்கு விசுவாசமா?


சமீபத்திய செய்தி