உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இலவச கண் சிகிச்சை முகாம்: மாணவர்களுக்கு பரிசோதனை

இலவச கண் சிகிச்சை முகாம்: மாணவர்களுக்கு பரிசோதனை

உடுமலை:உடுமலை அருகே புங்கமுத்துாரில் காந்தி கலா நிலையம் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில், உடுமலை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள், சத்திய சேவா சங்கம், பள்ளி நிர்வாகம் சார்பில் இலசவ கண் சிகிச்சை முகாம் நடந்தது. முகாமில், பள்ளிச்செயலாளர் திருமலைசாமி தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் செந்தில்வேல் முன்னிலை வகித்தார்.நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் அசோக்குமார் வரவேற்றார். பார்வை குறைபாடுள்ள மாணவர்களுக்கு முகாமில் பரிசோதனை செய்யப்பட்டு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டன. மேல் சிகிச்சை தேவைப்படுவோருக்கு வேண்டிய மருத்துவ உதவிகள் இலவசமாக பரிந்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சியில், மாணவ, மாணவியர், ஆசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் மகேந்திரபாபு நன்றி தெரிவித்தார். ஆசிரியர் சசிக்குமார் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை