உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பென்சில் முனை நோய் நீங்க நுண்ணுாட்ட கலவை கொடுங்க!

பென்சில் முனை நோய் நீங்க நுண்ணுாட்ட கலவை கொடுங்க!

உடுமலை;உடுமலை சுற்றுப்பகுதிகளில் தென்னை சாகுபடியில், பல்வேறு நோய்த்தாக்குதலால், காய்ப்பு திறன் இழப்பு ஏற்படுகிறது.குறிப்பாக, பென்சில் முனை குறைபாடு பரவலாக உள்ளது. தென்னை மரங்களில், இக்குறைபாட்டால், மரத்தின் தண்டுபகுதி மேலே செல்லச் செல்ல சிறுத்தும், கொண்டை பகுதியில், மட்டைகள் குறைந்து, இரண்டு அல்லது ஒரு குலை மட்டுமே இருக்கும். அந்த குலைகளிலும், இரண்டு மற்றும் மூன்று காய்கள் மட்டும் நீண்டு சிறுத்து, பருப்பு இல்லாமல் காணப்படும்.இந்த குறைபாட்டை கட்டுப்படுத்த, வேளாண் பல்கலையின் தென்னை நுண்ணுாட்ட கலவையை ஒரு மரத்துக்கு, 500 கிராம் வீதம், ஆறு மாதத்துக்கு இரண்டு முறை இட வேண்டும். கூடுதலாக மரம் ஒன்றுக்கு துத்தநாக சல்பேட்; தாமிர சல்பேட்; மாங்கனீசு சல்பேட், இருப்பு சல்பேட், போராக்ஸ் ஆகியவற்றை தலா, 225 கிராம், சோடியம் மாலிப்பிட்டேட் 10 கிராம் என்ற அளவில், 10 லிட்டர் தண்ணீரில் கரைத்து மரத்தின் வேர்பகுதியில், 6 மாதத்துக்கு ஒரு முறை ஊற்ற வேண்டும், என, கோவை வேளாண் பல்கலை அறிவுறுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை